சலபம் என்ற வடசொல்லுக்கு வெட்டுக்கிளி என்று பொருள். நோய்கள் அனைத்தையும் வெட்டி எறிவதால் இவ்வாசனம் சலபாசனம் என்று பெயர் பெற்றது. இருதய நோயுள்ளவர்களும் இரத்த அழுத்த நோயுள்ளர்களும் இந்த ஆசனத்தைச் செய்யக் கூடாது.
முதலில் குப்புறப் படுத்து முகத்தை விரிப்பில் தாழ்த்தி வைத்துக் கொள்ளவும். இரு கைகளையும் தலைக்கு முன்புறமாக நீட்டி வைத்துக் கொள்ளவும். மூச்சை உள்ளே இழுத்து அடக்கியவாறு,தலை மற்றும் கைகளைத் தரையில் இருந்து தூக்கி கால்களை விறைப்பாக வைத்து படத்தில் காட்டியவாறு மேலே தூக்கவும். வயிறு மட்டுமே விரிப்பில் இருக்க வேண்டும். ஒரு முறைக்கு பத்து வினாடியாக மிக மெதுவாக உயரே தூக்கி கீழே இறக்க வேண்டும்.
இதை செய்வதால், வீசிங் எனப்படும் இளைப்பு நீங்கும். கர்பபை பிரச்சினைகளை தீர்க்கிறது. வாயிற்று பகுதியின் பருமனை குறைக்கிறது. முதுகுபுற தசைகளை வலிமையடைய செய்கிறது.மலச்சிக்கலை போக்குகிறது. முகப்பொலிவையும், கண் பார்வையையும் பெருக்குகிறது.