இறால் - 1/2 kg
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 1
பச்சைமிளகாய் - இரண்டு
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன்
மல்லித்தூள் - 2 ஸ்பூன்
மிளகாய்த்தூள் - முக்கால் ஸ்பூன்
சீரகத்தூள் - அரை ஸ்பூன்
கரம் மசாலா தூள் - முக்கால் ஸ்பூன்
பெப்பர் தூள் - ஒன்றரை ஸ்பூன்
நல்லெண்ணெய் - 5 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
வெங்காயத்தை ஒன்றிரண்டாக மிக்ஸியில் போட்டு அடித்து வைத்துக் கொள்ளவும். தக்காளியை நைஸ் பேஸ்ட்டாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி அரைத்து வைத்துள்ள வெங்காயம் ,இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு நன்கு வதக்கவும்.
வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கி அதில் மல்லித்தூள் ,மிளகாய்த்தூள் ,மஞ்சள்தூள் ,கரம் மசாலாத்தூள் ,சீரகத்தூள் போட்டு பச்சை வாசனை போக நன்கு வதக்கவும். பின்பு அதனுடன் தக்காளி விழுது சேர்த்து ஐந்து நிமிடம் வதக்கி இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
பின்பு அதனுடன் மஞ்சள் தூள் ,போட்டு கழுவிய இறால் ,தேவையான அளவுக்கு உப்பு, பெப்பர் தூள் போட்டு , ஒரு கொதி கொதிக்கவிட்டு கடாயை மூடி அடுப்பை 10 நிமிடம் சிம்மில் வைக்கவும். அடிக்கடி திறந்து பார்த்து கிளறி விடவும். இறால் நன்கு வெந்து கிரேவி பதம் வந்தவுடன் மல்லித்தழை தூவி இறக்கினால் மிகவும் சுவையான இறால் பெப்பர் கிரேவி ரெடி