Breaking News :

Wednesday, April 24
.

பொன்னாங்கண்ணிக் கீரை


இந்த கீரை இரண்டு நிறத்தில் உள்ளது
இதன் இலை மற்றும் நிறம் இவைகளை பொறுத்து நாட்டு பொன்னாங்கண்ணி, சீமை பொன்னாங்கண்ணி
என்று பிரிக்கலாம்.
நாட்டு பொன்னங்கண்ணி பச்சை நிரத்திலும்,
சீமை பொன்னாங்கண்ணி இளம் சிவப்பு நிறத்திலும் காணப்படுகிறது.
நாட்டு பொன்னாங்கண்ணி கீரை பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளன.
சீமை பொன்னங்கண்ணி
பொதுவாக அழகுக்காக வளர்க்கப் படுகிறது.
இருந்தாலும் இதுவும் சாப்பிட சிறந்த கீரைதான்.
இரண்டும் ஒரே பலன்களை தான் கொடுக்கிறது.

கீரையில் உள்ள சத்துக்கள் :

பொன்னாங் கண்ணி கீரை 10 கிராமில் 73 கலோரி ஆற்றல்,
5 கிராம் புரதம்,
1 கிராம் கொழுப்பு,
12 கிராம் கார்போஹைட்ரேட்,
3 கிராம் நார்ச்சத்து உள்ளது.
510 மில்லி கிராம் கால்சியம்,
60 மில்லி கிராம் பாஸ்பரஸ்,
2 மில்லி கிராம் இரும்பு சத்து உள்ளன.

நன்மைகள்
கீரையின் சாறு பூஞ்சை எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளன.
மேலும் காயங்களை ஆற்றும் மற்றும் உடலில் அமிலத்தன்மையின் அளவை குறைக்க உதவுகின்றன என்றும் தெரிய வந்துள்ளது.
மேலும் பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை பார்ப்போம்.

மலச்சிக்கல்,
மூலம்,
ரத்தக் கசிவு உள்ளிட்ட உபாதைகளை பொன்னாங்கண்ணி கீரை குணப் படுத்துவதாக சொல்லப்படுகிறது.
கேரட் சாறுடன் சம அளவு பொன்னாங்கண்ணி சாறு கலந்து,
ஒரு சிட்டிகை கல் உப்பு சேர்த்து, தொடர்ந்து சாப்பிட மூலம்,
இரத்த கசிவு போன்ற கோளாறுகள் குணமாகும்.
பொன்னாங்கண்ணி சாறு மற்றும் முள்ளங்கி சாறு சமமாக கலந்து தினமும் இரண்டு தேக்கரண்டி இரண்டு வீதம் மூன்று முறை சாப்பிட்டு வந்தால் கடுமையான மலச் சிக்கல்,
மூலத்தினால் ஏற்படும் இரத்தப்போக்கு  குணமாகும்.

இந்திய மருத்துவத்தில் பொன்னாங்கண்ணி கீரை
 கல்லீரலில் பித்த
ஓட்டத்தைத் தூண்டும் செயல் ஊக்கியாக பயன் படுத்தப்படுகிறது.

இரண்டு ஸ்பூன்
பொன்னாங் கண்ணி கீரைச் சாற்றை ஒன்று அல்லது இரண்டு பூண்டுப் பற்களுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் இடைவிடாத காய்ச்சல்,
தொடர் இருமல் மற்றும்
ஆஸ்துமா குணமாகும்.

பொன்னாங்கண்ணி கீரையுடன்
துவரம் பருப்பு மற்றும் நெய் சேர்த்து சமைத்து பொரியல் செய்தோ அல்லது சூப் போலசெய்தோ சாதத்துடன் சேர்த்து சாப்பிட உடல் எடை கூடும்.

உடலில் ஆற்றல் (சக்தி)
அதிகரிக்க 
பொன்னாங்கண்ணி கீரை சாறெடுத்து பசும்பால் அல்லது ஆட்டு பாலில் கலந்து சாப்பிட்டு வர உடல் வலிமையும்,
சக்தியும் அதிகரிக்கும்.
தினமும் காலையில் ஒரு டீஸ்பூன் பொன்னாங்கண்ணி கீரைச் சாற்றை தேங்காய் எண்ணெயில் கலந்து சாப்பிட்டு வர உடலின் ஒட்டுமொத்த ஆற்றல் மட்டம் மேம்படும்.

கோடைகாலத்தில்
ஏற்படும் உடல் சூடு குறைய,
இந்த கீரை சாற்றை உச்சந்தலையில் நன்றாக மசாஜ் செய்து
சுமார் 15 நிமிடங்கள் கழித்து
சீக்காய் அல்லது ஷாம்பு போட்டு தலையை கழுவ வேண்டும். இம்முறையானது உடல் சூட்டை கனிசமாக குறைத்து கண்களை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது. மேலும்
குறிப்பிட்ட சீரான இடைவெளியில் இவ்வாறு மீண்டும் மீண்டும் செய்வதன் மூலம் முடி வளர்ச்சிக்கும் உதவுகிறது.

பார்வை கோளாறு நீங்க 
இந்த கீரை பயன்கள் பலவற்றில் முக்கியமானது
பார்வையை மேம்படுத்து ஆகும். மாலைக் கண் நோய் உள்ளவர்கள் பொன்னாங்கண்ணி
பூவை தொடர்ந்து சாப்பிட்டு வர
கண் பார்வையில் நல்ல முன்னேற்றம் தெரியும்.
உடலுக்கு குளிர்ச்சியைத்தந்து,
கண் நரம்புகளை வலுவாக்கி,
தசைகளை வலுப்படுத்தி,
பார்வை சக்தியை மேம்படுத்தி,
கண் நோய்க்கு சிறந்த மருந்தாகச் உதவுகிறது.

தூக்க மின்மையை இந்த கீரை போக்குகிறது,
இந்த கீரையானது
நமது மத்திய நரம்பு மண்டலத்தை சீராக்கி தூக்கமின்மையை போக்குகிறது.
மேலும் நரம்பு சம்பந்தமான பல நோய்களை குணப்படுத்தி,
ஞாபக சக்தியை மேம்படுத்தவும்,
கண் மற்றும் மூளைக்கு குளிர்ச்சியையும், தளர்வையும் தருகிறது.

இந்த கீரை இந்தியாவில் எல்லா இடங்களிலும் கிடைக்கக்கூடிய சாதாரணமான கீரை.
அதிலே இருக்கும் ஆரோக்கியம் சார்ந்த விஷயங்கள் மிக அதிகம்.
இது கற்பக மூலிகையென்று
அந்தக்கால சித்தர்களால் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏனெனில் சகல விதமான நோய்களுக்கு இதை மருந்தாக பயன்படுத்தி இருக்கின்றனர்.

பொதுவாக 
காய்கறிகள், கீரைவகைளில்
அரிசி உணவை போல் அதிக கார்போஹைட்ரேட் இருக்காது. வைட்டமின்கள், தாதுஉப்புக்கள், உயிர்ச்சத்துக்கள் மட்டுமே அதிகம் இருக்கும்.
ஆனால் இந்த பொன்னாங்கண்ணி கீரையில் மட்டும் வைட்டமின்கள், தாது உப்புக்களோடு உடலுக்கு சக்தி அளிக்கும் மாவு சத்தும் இருக்கிறது.
சோறு பாதி, இந்தக் கீரை பாதி என்று அந்த காலத்தில் சாப்பிட்டு விட்டு,
வயலில் இறங்கி வரப்பு கட்டிய பெருசுகள் தான் எத்தனை எத்தனையோ...!

இந்தக் கீரையை தொடர்ந்து வேகவைத்து உண்டால்,
சும்மா தங்க பஸ்பம் சாப்பிட்ட மாதிரி உடல் தகதக வென்று ஜொலிக்கும்.
இந்த
பொன்னாங்கண்ணி கீரையை உப்பில்லாமல் வேகவைத்து, வெண்ணெய் சேர்த்து
ஒரு மண்டலம் உண்டுவர கண் சார்ந்த அனைத்து நோய்களில் இருந்து விடுதலை கிடைக்குமாம்.
கண் ஒளி பெறுமாம்.
இதை ஏற்கனவே நமது முன்னோர்கள் அனுபவத்தில் கண்டிருக்கிறார்கள். அதனால்தான்
இதற்கு
பொன்+ஆம்+கா+இ=பொன்னாங்காணி என்று பொருத்தமான காரணப்பெயர் வைத்திருக்கிறார்கள்.
அதாவது இது நமது கண் ஒளியை பொன் போல ஒளிர செய்யுமாம். காலப்போக்கில் பொன்னாங்காணி என்பது மருவி பொன்னாங்கண்ணி ஆகி  விட்டது.

பொன்னாங்கண்ணி கீரையை... மன்னிக்கவும்.
பொன்னாங்காணி கீரையை வதக்கி உண்டது மட்டுமல்லாமல் பசு நெய் விட்டு வதக்கி கண்களுக்கு வைத்து கட்டவும் செய்யலாம்.
தைலமாக செய்து தலைக்கு தேய்க்கவும் செய்யலாம். 
பொன்னாங்காணி கீரையை பச்சையாக ஒரு பிடி எடுத்து மென்று அதன் சாற்றை குடித்து வர சூட்டினால் வரும் வாய்புண், வாய் துர்நாற்றம் போன்ற பிரச்சனைகளில் இருந்து குணமடையலாம்

இந்த கீரையை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் ஆண்களின் மலட்டுத் தன்மையை குணப்படுத்த முடியும்,
மேலும் இது நீரிழிவு (சர்க்கரை) நோயாளிகளுக்கு ஆற்றலைத் தருவதோடு,
இரத்தத்தில் சர்க்கரையின் அளவைப் பராமரிக்கவும் உதவுகிறது.

உடலில் புற்றுநோய் வரவிடாமல்
எதிர்ப்பு சக்தியை கொடுக்கிறது இரத்தத்தில் கலந்துள்ள நச்சுப்பொருளை நீக்கி புற்றுநோய் வராமல் தடுக்கிறது.
மேலும் இது கிருமிகளை அழித்து காயங்களை ஆற்றும் ஆற்றல் கொண்டது.

சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல்  இரண்டு லிட்டர் எருமைப் பாலிலிருந்து மோர் எடுத்து பொன்னாங்கண்ணி வேர்களை நன்றாக அலசி எடுத்து இடித்து கலந்து வடிகட்டி 
அந்த மோரைக் குடித்துவர
சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சல்
குணமாகும்.
மேலும் பல நன்மைகள் இதில் உண்டு
தவறாமல் வாரம் ஒரு முறையாவது பயன்படுத்துங்கள்.


.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.