நம் தமிழ் நாட்டின் தேசிய உணவு பரோட்டா என்று சொல்லும் அளவிற்கு தமிழர்களின் உணவில் பரோட்டா இன்று முக்கிய இடம் பிடித்துள்ளது. இதற்கு காரணம் அதன் சுவையும் மலிவான விலையும் தான் முக்கியமாக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலர் இதற்கு அடிமை என்று சொல்லலாம். அந்த அளவுக்கு இதன் சுவை அனைவரையும் கட்டிப் போட்டுள்ளது. உண்மையில் மைதா மாவு கோதுமையில் இருந்து தான் தயாரிக்கப்படுகிறது. அப்படி இருக்க இதை ஏன் உடலுக்கு ஆபத்தானது என்று சொல்கிறார்கள், உண்மைதான் என்ன பதிவை பாருங்கள் உங்களுக்கே புரியும். அதன் பிறகு நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
மைதாவில் தயார் செய்யப்படும் உணவான பரோட்டாவை தொடர்ந்து சாப்பிட கூடாது என்பதற்கான 9 காரணங்களை முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.
1. நன்றாக மாவாக அரைக்கப்பட்ட கோதுமை மாவு மஞ்சள் நிறத்தில்தான் இருக்கும் அதை பென்சாயில் பெராக்சைடு என்னும் ரசாயனம் கொண்டு வெண்மையாக்குகிறார்கள் அதுவே மைதா. பென்சாயில் பெராக்ஸைடு என்பது நமது முடியில் அடிக்கும் ஹேர் டை யில் சேர்க்கப்படும் கெமிக்கல். இதை சாப்பிட்டால் நம் குடல் என்ன ஆகும்? நீங்களே யோசியுங்கள்.
2. அடுத்து அலக்சான் என்னும் ரசாயனம் மாவை மிருதுவாக்க மாற்ற சேர்க்கப்படுகிறது. பொதுவாக நோய்களுக்கு மருந்து கண்டுபிடிப் பதற்கு எலிக்கு அந்த நோயை உருவாக்கி பின்னர் அந்த மருந்தை செலுத்தி பரிசோதிப்பார்கள். அந்த வகையில் எலிக்கு சர்க்கரை நோயை உருவாக்குவதற்காக கொடுக்கப்படும் மருந்து தான் அலக்சான். இந்த மருந்தை எலிக்கு கொடுத்ததும் அதனுடைய கணையத்தில் இன்சுலின் சுரக்கும் செல்களை அழித்துவிடும். அதன் மூலம் அந்த எலிக்கு நீரிழிவு நோய் ஏற்படும். மேலும் பலவித நோய்களும் உருவாகும். பிறகு அவற்றுக்கு மருந்து கொடுத்து அதை பரிசோதிப்பார்கள். எனவே நீரிழிவு மற்றும் பல நோய்களை ஏற்படுத்தும் அலக்சான் இந்த மைதாவில் சேர்க்கப்படுகிறது.
3. இந்த மைதாவில் சர்க்கரை சத்தை தவிர 100% ஸ்டார்ச் எனப்படும் கார்போஹைட்ரேட் மட்டுமே உள்ளது. நார்ச்சத்து விட்டமின் புரதம் என்று எதுவுமே இருக்காது. இதனால் எளிதில் ஜீரணமாகாது. மைதாவில் நார்ச்சத்து துளியும் இல்லை என்பதால் பரோட்டா சாப்பிடுவோருக்கு எளிதில் மலச்சிக்கல் ஏற்படும். குறிப்பாக இரவு நேரத்தில் பரோட்டா சாப்பிடுவதை மேலும் ஆபத்தை விலைக்கு வாங்குவதற்கு சமம்.
4. பரோட்டா சாப்பிடும்பொழுது கணைய நீர் சுரப்பியை சோர்வடைய செய்து சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த விடாமல் தடுக்கிறது. இதனால் கணையத்தில் இன்சுலின் சுரப்பது தடை படுகிறது. இதனால் நீரிழிவு நோய் ஏற்படுகிறது. எனவே மைதாவில் தயாரிக்கப்படும் உணவுகளை அதிகம் சாப்பிடுவது நீரிழிவு நோய் வரும் வாய்ப்பு அதிகம் உள்ளது. மேலும் மைதா உணவுகளுக்கு கிளசீனிக் அளவீடு அதிகம். அதாவது சாப்பிட்டவுடன் விரைவில் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கச் செய்யும். எனவே சர்க்கரை நோயாளிகள் தடை விதிக்க வேண்டிய முக்கிய உணவு பரோட்டா.
5. இன்றைக்கு சர்க்கரை நோய் உடல் பருமன் போன்ற நோய்கள் அதிகரிப்பதற்கு பல்வேறு காரணங்களோடு பரோட்டாவையும் போர் காரணமாக சொல்லலாம். சத்துக்கள் ஏதும் இல்லாத வெற்றுக் கலோரிகள் மட்டும் கொடுக்கும் மைதா உடல் எடையை விரைவில் கொட்டும். அதுவும் குழந்தைப் பருவம் முதலிலே பரோட்டா சாப்பிடுபவர்களுக்கு இளம் வயதிலே உடல் பருமன் அதிகரிக்கும் வாய்ப்புகள் அதிகம்.
6.முதுகுத்தண்டு கோளாறு rheumatism ஆர்த்தடீஸ் வாயுத் தொல்லை போன்ற நோயினால் அவதிப்படுபவர்கள் பரோட்டாவை தொட்டுக்கூட பார்க்க கூடாது. ஏனென்றால் பரோட்டா மலச் சிக்கலை ஏற்படுத்தி வாத தன்மையை அதிகப்படுத்தும்.
7. பரோட்டாவின் மூலபொருளான மைதாவில் மனிதனின் செரிமான மண்டலத்தில் பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. மைதாவை ஜீரணிக்க செரிமான உறுப்புகள் அதிகம் வேலை செய்ய வேண்டியுள்ளது. இதனால் விரைவிலேயே உடல் இயக்கம் பாதிக்கப்படும்.
8. பரோட்டாவில் மேலும் சுவை கூட்டுவதற்காக டால்டா சேர்க்கிறார்கள். இது இதய ரத்தக் குழாய்களில் படிந்து மாரடைப்பு ஏற்பட காரணமாக இருக்கிறது. மேலும் மைதாவில் பூஞ்சை உருவாகாமல் இருப்பதற்கு மேக்கரின் ரசாயனம் சேர்க்கப்படுகிறது. இதுவும் உடல்நலத்தை கொடுக்க கூடியது. முக்கியமாக பரோட்டா தயாரிக்கும் பொழுது இதை மிருதுவாக வருவதற்காக நிறைய எண்ணை சேர்ந்து பல மணி நேரம் எண்ணையிலேயே ஊர வைக்கிறார்கள். இதில் மேலும் ஆபத்தானது.
9.பரோட்டா தயாரிக்க
Artificial colors
Mineral oils
Taste makers
Preservatives
Sugar
Saccarine
Ajinomotto
போன்ற ஆபத்தை ஏற்படுத்தும் பொருட்களும் சேர்க்கப்படுகிறது.
எனவே பரோட்டாவை தொடர்ந்து சாப்பிட்டால் இதயத்திற்கு செல்லும் இரத்த நாளங்கள் பாதிக்கப்படுவதோடு கொழுப்பு படிதல் உடல் பருமன் உயர் ரத்த அழுத்தம் நீரிழிவு நோய் மற்றும் மாரடைப்பு போன்ற நோய்கள் இளம் வயதிலேயே வரும் என்பதும் ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. எனவே பல நாடுகளில் மைதா பயன்படுத்துவதை தடை செய்துள்ளனர். எனவே நீங்களும் இனி வரும் பரோட்டாவை தவிர்த்து விட்டு நமது பாரம்பரிய உணவான கம்பு கேழ்வரகு திணை என்று நமது உணவு முறைக்கு மாறிக் கொள்ளுங்கள். பொதுவாக எந்த ஒரு உணவாக இருந்தாலும் இது நமது உடலுக்கு நல்லதா? கெட்டதா? என்று தெரிந்துகொண்டு சாப்பிடுங்கள்.