Breaking News :

Monday, February 10
.

சிற்றின்ப பலவீனம் குறைக்கும் ஓரிதழ் தாமரை!


இது குற்றுச் செடி வகையைச் சேர்ந்தது. மாற்றடுக்கில் அமைந்த இலைகளையுடையது. நல்ல வளர்ச்சியாக வளர்ந்தால் அரை அடி வரை வளரும். இதன் இலைகள் அரை அங்குலத்துக்குமேல் இருக்காது. இதற்கு தண்டுப் பகுதியில் இருந்து கிளைகள் ஏற்படாது. மேல் நோக்கியே வளரும் ஆற்றல் கொண்டது.

இளஞ்சிவப்பு நிறமுள்ள ஒரே இதழ் மட்டும் உள்ள பூ இருக்கும். அதனால் இது ஓரிதழ் தாமரை என்று அழைக்கப்படுகின்றது. செடியின் எல்லாப் பாகங்களுமே மருத்துவக் குணம் கொண்டவை. தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் எல்லா இடங்களிலும் தானாகவே வளரக் கூடியது. தாது வெப்பு அகற்றியாகவும் சிறுநீர்ப் பெருக்கியாகவும் காமம் பெருக்கியாகவும் பயன்படுகின்றது.

வேறு பெயர்கள்: சூது, சூர்யகாந்தி, ரத்னபுருசு.
ஆங்கிலத்தில்: Ionidium suffruticosum; Ging, violaceae


ஓரிதழ் தாமரை இலையைப் பூவுடன் பறித்து அரைத்து நெல்லிக்காயளவு, 1 டம்ளர் பசும்பாலில் கலந்து 2 வேளை குடித்துவர இரத்தம் சுத்தமாகி உடல் பலம் பெறும். இதையே தொடர்ந்து சாப்பிட்டு வர வெள்ளை வெட்டை நோய்கள் குணமாகும்.

இதன் இலையை மட்டும் தினமும் விடிவதற்கு முன்னர் சிறிதளவு மென்று தின்று பால் குடித்து வர 48 நாட்களில் தாதுபலம், அதிமூத்திரம், வெள்ளை வெட்டைச் சூடு, நீர் எரிச்சல், சிற்றின்ப பலவீனம் குணமாகும்.

ஓரிதழ் தாமரையின் சமூலம் எடுத்து அத்துடன் சங்கன் குப்பி இலை 5 சேர்த்து அரைத்து காலையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து சாப்பிட்டு வர உடல் கருமை நிறம் மாறி வரும். மேலும் இதயம் பலமாகி இதயத் துடிப்பு, படபடப்பு குறைந்து உடலைச் சமச்சீராக்கும்.

ஓரிதழ் தாமரை இலை, கீழா நெல்லி இலை, யானை நெருஞ்சில் இலை மூன்றையும் வகைக்கு ஒரு கைப்பிடியளவு எடுத்து அரைத்து 1 டம்ளர் எருமைத் தயிரில் 10 நாட்கள் காலையில் சாப்பிட்டு வர நீர்த்தாரை ரணம், வெள்ளை ஒழுக்கு குணமாகும்.

ஓரிதழ் தாமரை இலையையும் தாமரையுடன் காலையில் வெறும் வயிற்றில் தின்று வர (வழுவழுப்பான பசை போன்று தென்படும்) மேக வெட்டை (எயிட்ஸ்) நோயால் பாதிக்கப்பட்டவர்கள் நாளடைவில் குணமடைவர்.
ஓரிதழ் தாமரையோடு எலும்பு ஓட்டி இலையையும் சேர்த்து ஒரு கைப்பிடியளவு தினமும் காலையில் தின்று வர முகத்தில் எலும்புகளில் கீறல், உடைந்து இருக்கும் எலும்புகள் கூடிவரும்.

ஓரிதழ் தாமரையை இடித்துச் சாறு பிழிந்து 40 மிலி எடுத்து சிறிது சர்க்கரையைச் சேர்த்து காலையில் மட்டும் 3 நாள்கள் குடிக்க பெரும்பாடு நீங்கும். (இச்சா பத்தியம் இருக்க வேண்டும்).

ஓரிதழ் தாமரையும், நற்சீரகமும் சம அளவாக எடுத்து அரைத்து கொட்டைப்பாக்கு அளவு 5 வேளை கொடுக்க சுக்கில பிரமியம் தணியும். (இச்சா பத்தியம் இருக்க வேண்டும்).

ஓரிதழ் தாமரை, வெந்தயம், விடத்தலை வேர், சுக்கு, வால்மிளகு வகைக்கு 20 கிராம் எடுத்து கஷாயம் செய்து சாப்பிட்டு வர அரிப்பு நீங்கும்

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.