Breaking News :

Saturday, June 10

நாகலிங்க பூவின் பயன் என்ன?

சிவலிங்கத்தை ஒரு கோயிலில் பிரதிஷ்டை செய்யவேண்டும் என்றால், லிங்கத்திற்கு மேல்  ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கட்டவேண்டும்.  

அந்த பாத்திரத்திலிருந்து சொட்டு சொட்டாக தண்ணீர் விழும்.

சோழமன்னர் ஒருமுறை ஒரு சிவாலயத்தை கட்டினார்;  அப்போது அவருக்கு ஒரு அச்சம்தோன்றியது.

நம் காலத்திற்குப் பிறகு தண்ணீர் ஊற்றுவார்களோ இல்லையோ என்ற அச்சம்தான் அது.

உடனே ஒரு யோசனைத் தோன்றியது, சந்திரகாந்த கற்களால் கருவறையின் மேற்கூறையை அமைத்து மையத்தில் ஒரு கமலத்தை அமைத்தார்.

என்ன அதிசயம் 24 வினாடிக்கு ஒரு முறை காற்றின் ஈரத்தை . சந்திரகாந்தக்கல் உறிஞ்சி சிவலிங்கத்தில் தண்ணீராகச் சொட்டியது. கோயில் இருக்கும் ஊர் திட்டை

அதுபோல் இந்த நாகலிங்க மலரின் மேற்கூறையில், சின்னச் சின்ன ஆட்டணா இருக்கும் அந்தத் தும்பித் தாரையில் இருந்து 24 வினாடுக்கு ஒருமுறை ஒரு பனித்துளி அளவு தண்ணீர் லிங்கத்தில் விழும் அதிசயம் நடைபெறும்.

."நாகம் குடை பிடிக்க உள்ளே லிங்கம்" இருக்கும் அதியற்புத வடிவில் நாகலிங்கப் புஷ்பம் பூக்கும் .பூவுலகின் மகத்தான .நாம் வாழும் காலத்திலேயே நாகலிங்க மரம் இன்றும் தென்படுவது ,நாம் பெற்ற புண்ணியப் பேறே. தினசரி நாகலிங்க மர தரிசனமே நம் உள்ளுள் காலசக்தியையும், கால உணர்வையும் இயங்க வைப்பதாகும்.

நாகலிங்க புஷ்பத்தை ஆலயபூஜைக்கு அளித்தல் மிகப்பெரிய புண்ணிய காரியம் ஆகும்.

பல பிரதோஷ வழிபாட்டுப் பலன்களை ஒருங்கே தர வல்லதே இறைவனுக்கு நாகலிங்க பூவால் ஆற்றும் பூசனை.

நாகலிங்கப் பூவை வைத்து பூஜிப்பதின் முழுபலன்களையும் அடைய, பூஜிக்கப்படும் ஒவ்வொரு பூவிற்கும் ஒருவருக்கேனும் அன்னதானம் அளிக்க வேண்டும்.

நாகலிங்க மரம் இயற்கையான யோக அக்னியைப் பூண்டது ,நாகலிங்கப் பூவை மரத்தில் இருந்து பறிக்கும்போது கைக்கு இதமான , உஷ்ணமாய் இருப்பதை உணர்ந்திடலாம் .

ஒவ்வொரு நாகலிங்கப் பூவும் உள்சூட்டுடன் இருக்கும் இதுவே யோகபுஷ்ப தவச்சூடு ஆகும் .இதன் ஸ்பரிசம் மனித மூளைக்கு மிகவும் நல்லது.

ஒவ்வொரு நாகலிங்க பூவும் சூரிய ,சந்திர கிரணங்களின் யோக சக்தியை கொண்டு மட்டுமே மலர்கின்றது 
.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.