ஆண்களின் வாழ்க்கை முழுதும் அவர்களின் மிகப்பெரிய பலவீனம் பெண்கள் மட்டுமே என்பதற்கு விளக்கம் தருகிறேன்.
பிறந்த ஆண்/பெண் குழந்தை தன்னிலை அறியும் வரை தாயை சார்ந்தே உள்ளது. பால் குடிப்பது முதல் மலம் கழிப்பது வரை.
சிறுவனாக இருக்கையில் பள்ளிக்கு அழைத்துச் செல்லப்படுவது முதல் அவனது வீட்டுப்பாடங்கள் எழுத உதவுவது வரை பெண்களை சார்ந்தே இருக்கிறான்.
பதின் பருவத்தில் அப்பாவிடம் சந்தேகம் கேட்பதை விட அம்மாவிடம் கேட்பது அதிகம். சகோதரிகளிடம் உதவி கேட்பது மிகவும் சாமான்யம். ஆக அங்கும் பெண்களை சார்தலே நடைபெறுகிறது.
மீசை முளைத்த பிறகு பெண் தோழிகளை தேடுவது. காரணம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும்….
வேலை கிடைத்த பிறகு வாழ்க்கைத் துணை தேடுவது என்பதில் தொடங்கி அவனுக்கு திருமணமாகும் வரை ஒவ்வொரு நிலையிலும் அவன் பெண்களை சார்ந்தே இருக்கிறான்.
திருமணமாகி பெண் குழந்தைக்கு தந்தையாகும் தருணத்தில் அவளையே ஆண்(தந்தை) கொண்டாடுகிறான். அவளிடமும் உரிமையாக பணிவிடை செய்து கொள்கிறான். அக்குழந்தைக்கு திருமணமானாலும் கூட அவனது பாசம் அவளிடம் தான் அதிகம் தன் மகன்களை விடவும்.
தன் எல்லா கடமைகளும் முடிந்து கடைசி காலத்தில் தனக்கான உடல் உபாதைகளுக்கு உதவி கேட்கத் தொடங்கி உயிர் விடும் தருணத்தில் மனைவி/மகள் மடி கேட்கும் காலம் வரை அந்த ஆண் பெண்களை சார்ந்தே இருக்கிறான்.
ஆக, ஆண்களின் வாழ்க்கை முழுதும் அவர்களின் மிகப்பெரிய பலவீனம் பெண்கள் மட்டுமே என்பதும். இதன் மூலம் துல்லியமான உறுதிப்படுத்தப்பட்ட உண்மை ஆகிறது.
குறிப்பு : நான் பெண்களுக்கு எதிரானவன் அல்ல…. உள்ளதை உள்ள படி பாராட்டவும் தெரியும்… அல்லாததை சொற்களால் கண்டிக்கவும் தெரியும்…மனதிற்கு பட்டதை தோன்றியதை அவர்களின் மனம் கோணாமல் சொல்ல முயற்சித்து முடிந்த வரை சொல்லவும் செய்கிறேன்…. இது ஒன்று தான் நான் இந்த பதில் எழுதுவதன் நோக்கமே….