Breaking News :

Thursday, December 05
.

ஆண்களுக்கு இளம் வயதில் மாரடைப்பு?


பிரபலமான தமிழ் சீரியல் நடிகை ஸ்ருதி ஷன்முகப் ப்ரியா.  இவர்  நாதஸ்வரம், பாரதி கண்ணம்மா போன்ற நாடகங்களின் மூலம் ரசிகர்களை அதிகம் ஈர்த்தவர்.  கடந்த வருடம் (மே 2022) அன்று இவரின் நீண்ட நாள் காதலரை திருமணம் செய்து கொண்டார்.

அவர் காதல் கணவர் ஒரு ஆணழகன் போட்டியில் கலந்து கொள்ளும் பாடி பில்டர், போன வருடம் நடைப்பெற்ற போட்டியில் கலந்து கொண்டு சில்வர் பதக்கத்தை வென்றார். இருவரும் இருவரது துறைகளில் வெற்றிகரமாக இயங்கி கொண்டே , தங்கள் இல்லர வாழ்க்கையிலும் குறைவில்லா சந்தோஷத்தை அனுபவித்து வந்த நிலையில், நேற்று (02/08/2023) அன்று நடிகை ஸ்ருதி ஷன்முகப் ப்ரியா அவரின் காதல் கணவர் மாரடைப்பால் உயிரிழந்தார். அவருக்கு வயது (30)

உணவு கட்டுப்பாடு, ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி மேற்கொண்ட அந்த ஆணழகன் திருமணமான ஒரே வருடத்தில் தன் மனைவியை விதவையாக்கிவிட்டு இவ்வுலகை விட்டு பிரிந்தார். குறிப்பிட்ட சில மாதங்களுக்குள் நான் கேள்விப்படும் நான்காவது இளம் வயது தீடீர் மரணம்‌ இது!

கண்டதை சாப்பிட்டு தொப்பையோடு திரிபவர்களே 60,70 வயதுவரை வாழ்கிற காலத்தில், உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ளும் இளைஞர்கள் திடீரென மாரடைப்பு வந்து இறப்பது உடற்பயிற்சி பற்றி பெரிய சந்தேக கேள்விக்குறியை எழுப்புகிறது ‌.

கன்னட சூப்பர் ஸ்டார் நடிகர் டாக்டர் ராஜ்குமார் அவர்களின் இளைய மகனும், நடிகர் சிவராஜ்குமார் அவர்களின் தம்பியும், அப்பு என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் புனித் ராஜ்குமார் அவர்கள் கடந்த 2021 அன்று மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 46.

அவர் உடற்பயிற்சி செய்து கொண்டு இருந்த போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது என்பது கூடுதல் தகவல்.  உடற்பயிற்சி செய்யும் ஆண்கள் சற்று கவனமாக இருங்கள்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.