படுக்கையறையில் கணவன்/மனைவி இருவரும் தங்களின் பாலுறவில் உச்ச இன்பத்தை அனுபவித்தவர்கள் ஒரு சதவீதத்தினர் கூட விவாகரத்திற்கு விண்ணப்பம் செய்வது இல்லை என்று ஒரு ஆய்வில் வெளிவந்திருக்கும் தகவல்.
உச்சகட்ட இன்பம் என்பது எளிதில் அடையக்கூடிய விஷயம் என்று பின்வரு அத்தியாயங்களில் பார்க்கலாம்.
பாலியல் இன்பம் என்பது மனிதர்களின் பிறப்புரிமை
விஷ்வாமித்திரர் என்ற மகாயோகி தன்னை மறந்து பல யுகங்கள் இந்த உலக இன்பங்கள் எல்லாம் மாயை என்று துறந்து இறைவனை நோக்கி தவம் மேற்கொண்டார்.
செல்வம், புகழ், பதவி, ராஜாங்கம் அனைத்தையும் தூக்கி இருந்து தவம் செய்து கொண்டு இருக்கும் போது அவர் முன்னே அழகு பதுமையாக மேனகை வந்து நின்றாள் அவள் அழகை பார்த்த விஷ்வாமித்திரர் தொடர்ந்து தவம் செய்ய முடியாமல், அவரின் துறவறத்தை துறந்து விட்டு மேனகையின் மீது காதலில் விழுந்தார் எப்பேர்ப்பட்ட மனிதனாலும் காமத்தை வெல்லமுடியாது என்பதற்கு விஷ்வாமித்திரரும் ஒரு சாட்சி.
இந்த உலகில் அனைத்து உயிரினிகளும் காமம் என்ற மாபெரும் சக்தியின் குழந்தைகளே.
இந்த சக்தி நம் உடலில் ஒவ்வொரு அணுவிலும் புதைந்து இருக்கிறது.
ஆண் தன் ஆண்மையை காட்டுவதற்கும், பெண் தன் அழகை வெளிப்படுத்துவதற்கும் அணுவில் உள்ள காம ஆற்றலே ஆகும்.
காம சக்தியை எந்த ஒரு சக்தியாலும் கட்டுப்படுத்த இயலாது. எவ்வளவு பெரிய ஞானியாக இருந்தாலும் காமத்தை கடந்து தான் செல்ல வேண்டும்.
காமத்தை அடக்க வேண்டும் அப்போதுதான் இறைவனை அடையமுடியும் என்று மனிதர்களை பல வழிகளில் வேண்டுமென்றை குழப்பிக்கொண்டு இருக்கும் கூட்டம் இருக்கிறது.
ஆனால் அந்த கூட்டம் காமத்தை பல்வேறு வழிகளில் அனுபவித்து கொண்டு மக்களுக்கு அடக்க வேண்டும் என்று சொல்வார்கள்.
அதாவது இயற்கையாக எழும் காமத்தை ஒரு தவறான எண்ணமாக சித்தரித்து, அதை ஒரு பாவச்செயலாக சொல்லிக்கொடுத்து அதை அடக்க வேண்டும் என்று மக்களிடையே வேண்டும் என்றே விஷவிதைகளை மக்களின் மனதில் திட்டமிட்டு விதைத்து உள்ளனர்.
அதனால் காமம் சந்தோஷமான இன்பகரமான நிகழ்வை எதோ அழுகிய விஷமாக கருதி மக்கள் பயந்து பயந்து காமத்தை எதிர்கொள்கின்றனர்.
காமத்தை காமத்தின் உச்ச இன்பத்தை அனுபவிக்கும் தம்பதியினர் கோர்ட் வாசல் படியையும், ஹாஸ்பிடல் வாசல் படியையும் மிதிக்க மாட்டார்கள் என்பது பாலியல் மருத்துவர்களின் கூற்று