நம்முடைய வளர்ச்சி எப்போது நிற்கிறதோ அதுவரையும் சில உறுப்புகள் வளர்ந்து கொண்டே தான் இருக்கும். உறுப்புகளுடைய வளர்ச்சி மாற்றம், பதின்ம வயதில் தான் அதிக மாற்றத்தை காண்பிக்கும்.
நமது உடம்பில் 80க்கும் மேல் உறுப்புகள் இருப்பதால் பொதுவாக சில உறுப்புகளை மட்டும் பார்க்கலாம்.
ஆச்சரியம் என்னவென்றால் நமது உடலில் முக்கியமான உறுப்பான இதயம் கருத்தரித்த உடனேயே தன்னுடைய வளர்ச்சியை ஆரம்பிக்கிறது. பொதுவாக சொல்ல கேட்டிருப்போம் கையை மடக்கினால் அதன் அளவு என்னவோ அதுதான் இதயத்தின் அளவு என்று, அது உண்மை தான்.
குழந்தையின் கை மடக்கிய நிலையின் அளவில் தான் அதன் இதயமும் இருக்கும். அப்புறமாக குழந்தை வளர வளர இதயமும் வளர்கிறது.
சரி இதயம் எப்போது வளர்ச்சியை நிறுத்தும்?
கையின் வளர்ச்சி எப்போது நிற்கிறதோ அப்போதுதான் இதயத்தின் வளர்ச்சியும் நிற்கும்.
கையின் வளர்ச்சி எப்போது நிற்கும் என்று அடுத்த கேள்வி வருகிறதா?
கை எலும்புகளெல்லாமே கருவுற்ற ஆறாவது மாதத்தில் இருந்து வளர தொடங்கும். அதனுடைய வளர்ச்சி 13 வயதிலிருந்து 18 வயதிற்குள்ளாக நின்றுவிடும்.
குழந்தை பிறந்ததற்கு பிறகு தான் நுரையீரல் தன்னுடைய வேலையை தொடங்குகிறது. அம்னோடிக் நீர்மத்தில் இவ்வளவு நாள் இருந்த குழந்தை, வெளி சுவாசத்தை முதல் முறையாக சுவாசிக்கும் போது தான் நுரையீரல் செயல்படவே தொடங்குகிறது.
இந்த நுரையீரலுடைய வளர்ச்சி பெரும்பாலும் பதின்ம வயதிலிருந்து இருபது வயதுக்குள்ளாக நின்றுவிடும்.
அதோட வளர்ச்சி நின்னதுக்கு அப்புறம், ச்சும்மா இருக்காம, தம் (smoke) அடிச்சு அதை கெடுக்குறீங்க, பாவம் அது சுவாசிக்க முடியாம கஷ்டப்படுது. உங்களுக்கு இரக்கமே இல்லயா?)
மூளை, குழந்தையாக நாம் பிறக்கும்போதே 25% வளர்ந்துவிடும். அப்புறம் வேகமாக வளர்ந்து, 2 வயது ஆகும் போது வயது வந்தோர்க்கு உள்ள மூளை அளவுடன் ஒப்பிடும்போது 85% வளர்ந்துவிடும்.
மூளை இருபதாவது வயதில் அதனுடைய வளர்ச்சியை நிறுத்துகிறது. பிறகென்ன வளர்ச்சியை நிறுத்தினாலும் சாகும் வரை சிந்திக்கும் திறனை மெருகேற்றிக்கொண்டு இருக்கிறது.(அது நம்ம கையில தான் இருக்குது.
நாம் சாகும் வரை(அபசகுணமா சொல்லிட்டேனோ) தொடர்ந்து வளர்கிறது என்றால் அது எனக்கு தெரிந்து இரண்டு உறுப்புகள்.
ஏம்பா ஏய்! காது மூக்கெல்லாம் ஆண்பிள்ளைகளுக்கு இல்லையா?
நமக்கு ஆறு வயதாகும் போதே 90% காதும் மூக்கும் வளர்ந்துவிடும். மீதமிருக்கும் 10% (மூக்கு & காதிலிருக்கும் குருத்தெலும்பு) தான் நமது வாழ்நாள் முடியும் வரைக்கும் வளர்ந்துகொண்டே இருக்கும்.
நமது முகத்தில் இருக்கும் கண்ணைப் பற்றி ஒரு விடயத்தை நான் சொல்லியே ஆக வேண்டும். நாம் பிறந்ததற்கு பிறகு கண் வளராது என்று ஒரு தவறான கருத்து இருக்கிறது. ஆனால் நாம் பிறந்து 13 வயதாகும் வரை அதுவும் மெதுவாக வளர்ந்துகொண்டே தான் இருக்கும்.
நன்றி: விலங்கியல் மாணவன் சாமுவேல் ஜோசப் ராஜ் (Samuel Joseph)