Breaking News :

Wednesday, April 24
.

இலவங்க பட்டையால் அடேங்கப்பா மருத்துவ குணங்கள்!


உணவு எளிதில் செரிமானத்துக்கு இந்தப் பொருட்கள் பயன்படுகிறது,   பட்டையில் உள்ள மூலப்பொருள் மறதி நோய்க்கு மருந்தாக இருக்கிறது என்பது தெரியவந்துள்ளது.
 
பிரியாணி, குருமா போன்ற உணவு வகைகளில் உபயோகிக்கும் இந்த மரப்பட்டையை சின்னமான் (Cinnamon) என ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது. 

சரியான அளவில் அதற்கான முறையில் உட்கொள்ளப்படும் பட்டை மறதி நோயை பறந்தோடச் செய்துவிடும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். இதில் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளான அஜீரணம், நெஞ்செரிச்சல், வயிறு வலி என அனைத்திற்கும் நிவாரணம்.

இலவங்கப் பட்டையில் இயற்கையிலேயே ஆன்டி- பாக்டீரியா இருக்கிறது. இலவங்கத்தில் உடல் நலத்திற்கு தேவையான அளவு, மாங்கனீஸ், இரும்பு, கால்சியம் மற்றும் முக்கியமான தாது உப்புக்கள் உள்ளது.

உணவில் இலவங்கப் பட்டையைச் சேர்த்து வந்தால் வயிற்றுப்புண், குடல்புண் ஆறி வாய் துர்நாற்றம் நீங்கும். நமது அன்றாட உணவில் சேர்க்கும் கறிமசாலாவில் இலவங்கப் பட்டையையும் சேர்த்து அரைத்து சமைத்து சாப்பிட்டு வந்தால் செரிமான சக்தி அதிகரித்து வயிற்றில் புண்கள் ஏற்படாமல் பாதுகாக்கும். 

எளிதில் சீரணமாகாத உணவுகளை உண்பதால் அஜீரணக் கோளாறு ஏற்பட்டு மலச்சிக்கல், வாயுத் தொல்லை, குடல்புண், மூலநோய் போன்ற நோய்கள் உண்டாகும். 

விஷக்கடி, சிலந்திக்கடி, விஷப் பூச்சிகள் தாக்கினால் இலவங்கப்பட்டையை அரைத்து கடிபட்ட இடத்தின் மீது பற்றுப் போட்டு வந்தால் விஷம் முறியும். சில சமயங்களில் வாந்தி உருவாகும். வயிற்றில் பயங்கரமான வலி உண்டாகும்.

பல்வேறு அத்தியாவசிய ஊட்டச்சத்துகளைத் தன்னிடம் கொண்டுள்ள லவங்கப் பட்டை, சருமத்தை வெண்மையாக்க உதவுகிறது. 

சருமத்தில் உள்ள நிற வேறுபாடுகளைக் களைந்து சீரான சரும நிறத்தையும் வழங்குகிறது. கட்டிகள், பருக்கள், கொப்பளங்கள் போன்றவற்றிற்கு தகுந்த சிகிச்சையைத் தர உதவுகிறது லவங்கப் பட்டை. கரும்புள்ளிகள் மற்றும் வெள்ளைப் புள்ளிகளைப் போக்க உதவுகிறது. 

பாத்திரத்தில் தண்ணீர் மற்றும் பட்டை சேர்த்து கொதிக்க வைத்து அந்த ஆவியை முகர்ந்து வந்தால் சளி, இருமல் தொல்லை குணமாகும். 

வெது வெதுப்பான நீரில் பட்டையுடன் தேன் சேர்த்து கலந்து குடித்து வந்தால் தொண்டை கரகரப்பு, மூக்கில் நீர் வடிதல் போன்றவை குணமாகும்.


.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.