தேவையான பொருட்கள்
நெய் – 1 டீஸ்பூன்
ஏலக்காய் – ½ டீஸ்பூன்
தினை – ½ கப்
தண்ணீர் – 2 கப்
பால் – 1 லிட்டர்
வெல்லம் – 150 கிராம்
ரோஸ் வாட்டர் – 1 டீஸ்பூன்
வறுத்த முந்திரி, பிஸ்தா, பாதாம் – 3 டீஸ்பூன்
செய்முறை
ஒரு பிரஷர் குக்கரை அடுப்பில் வைத்து, அதிலே நெய், ஏலக்காய், தினை ஆகியவற்றை சேர்த்து அவை இளஞ்சிவப்பாக மாறும் வரை (சுமார் மூன்று முதல் நான்கு நிமிடங்கள்) வறுக்கவும். அதிலே இரண்டு கப் தண்ணீரைச் சேர்த்து, குக்கர் மூடியை மூடி, ஒரு விசில் வரும் வரை பொறுத்திருக்கவும். ஒரு விசில் வந்ததும் அடுப்பை அணைத்து விட்டு, கேஸ் அடங்கும் வரை காத்திருந்து பிறகு மூடியைத் திறக்கவும்.
அடுப்பில் ஒரு வாணலியை வைத்து அதிலே வெல்லத்தை சேர்த்து அத்துடன் ஒரு கப் அளவுக்கு தண்ணீர் சேர்த்து சூடாக்கவும். அந்த வெல்லம் கலந்த தண்ணீர் ஓரளவு கொதிக்க விடவும்.
குக்கரைத் திறந்து அத்துடன் பாலை சேர்த்து ஓரளவிற்கு கெட்டியாகும் வரை மிதமான தீயில் வைத்து கலக்கி வரவும். இந்தக் கலகையை ஒரு ஐந்து நிமிடத்திற்கு ஆற விடவும். ஆறிய பிறகு இத்துடன் வெல்லத் தண்ணீர், ரோஸ் வாட்டரை சேர்த்து நன்கு கலக்கவும். பிறகு வறுத்த முந்திரி, பிஸ்தா, பாதாமை உடைத்து சேர்க்கவும். சுவையான தீனை கீர் தயார்.
மேற்சொன்ன அளவுகள் ஆறு நபர்களுக்கானது. தேவைப்படுவோர் வெல்லம் மற்றும் நட்ஸ்களின் அளவை கூட்டியோ குறைத்தோ பயன்படுத்திக்கொள்ளலாம்.
தினை கீரில் அடங்கியுள்ள சத்துக்கள்
ஆற்றல் – 350 கலோரி
புரதச் சத்து – 08 கிராம்
கார்போஹைட்ரேட் – 34 கிராம்
கொழுப்புச் சத்து – 05 கிராம்