Breaking News :

Friday, April 19
.

சர்க்கரை வியாதி ஏன் வருது தெரியுமா?


மக்கள் மத்தியில் மிகப் பிரபலமாக இருக்கும் நோய்கள் என்று ஒரு பட்டியலைப் போட்டால் அதில் முதலிடத்தில் இருப்பது சர்க்கரை நோய். இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. தொலைக்காட்சி, பத்திரிகை என எல்லா வகையான ஊடகங்களிலும் சர்க்கரை நோய் பற்றிய செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன.

 

ஆனாலும் இன்றைக்கும் அந்நோய் பற்றிய விழிப்புணர்வு போதுமானதாக இல்லை. இதற்கு உதாரணமாகவும் சில புள்ளி விவரங்களைத்தான் காண்பிக்க வேண்டியிருக்கிறது.

 

உலகம் முழுவதிலும் சுமார் 15 கோடி பேர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். 2025&ம் ஆண்டுவாக்கில் இது இரண்டு மடங்காக உயரக்கூடும். அதிலும் குறிப்பாக, மூன்றாவது உலக நாடுகள் எனப்படும் வளரும் நாடுகளில் இந்த நோய் மிக வேகமாகப் பரவி வருகிறது.

 

உலகம் முழுவதிலும் உள்ள மக்களின் வாழ்க்கை முறை மாற்றத்தினால் லட்சக்கணக்கானவர்களைப் பாதிக்கும் நோயாக இது மறுமலர்ச்சி பெற்றுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பணக்காரர்களின் நோயாகக் கருதப்பட்ட இது, இயந்திரமயமாக்கல், உணவு முறை மாற்றம், வாழ்க்கை முறை, நவீன யுகத்து கவலைகள் மற்றும் கஷ்டங்களின் காரணமாக, தற்போது சாதாரண மக்களையும் பாதிக்கும் அளவுக்கு மலிந்துவிட்டது.

உலகிலேயே சர்க்கரை நோயாளிகள் குறைவாக இருக்க வேண்டிய நாடு இந்தியா. ஆனால், அதிர்ச்சி தரக்கூடிய உண்மை என்ன தெரியுமா? இந்தியர்கள் மற்ற நாட்டினரைக் காட்டிலும் சர்க்கரை நோய்க்கு மிகச் சுலபமாக இரையாகிறார்கள். கடந்த ஐம்பதாண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை இந்தியாவில் பல மடங்கு அதிகரித்துள்ளது.

 

தற்போது கிராமப்புற மக்களில் சுமார் மூன்று முதல் நான்கு சதவீதத்தினரும், கர்ப்புறங்களில் பத்து முதல் பன்னிரண்டு சதவீதத்தினரும் இந்நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். நாற்பது வயதுக்குக் கீழே உள்ளவர்களில் 38 சதவீதத்தினரும், இருபத்தைந்து வயதுக்குக் கீழே உள்ளவர்களில் 5 சதவீதத்தினரும் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

ஆராய்ச்சியாளார்களின் கூற்றுப்படி 2025&ம் ஆண்டு வாக்கில் இந்தியாவில் மட்டும் சுமா ஆறு கோடி சர்க்கரை நோயாளிகள் இருப்பார்கள். சீனாவில் மூன்றே முக்கால் கோடி பேரும், அமெரிக்காவில் இரண்டேகால் கோடி பேரும் இந்த நோயால் பாதிக்கப்பட்டிருப்பார்கள்.

 

சர்க்கரை நோய் பற்றி இன்னும் முழுமையான விழிப்புணர்வு வரவில்லை என்பதையே இந்தப் புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. எனவேதான், சர்க்கரை நோய்க்கும் பாலுறவுக்குறைபாட்டுக்குமான தொடர்பு பற்றி விரிவாகப் பேசும் முன்னர் இந்த நோய் பற்றி இங்கு விளக்கமாகப் பேச வேண்டி இருக்கிறது.

நாம் சாப்பிடும் உணவில் மாவுச் சத்து (சிணீக்ஷீதீஷீலீஹ்பீக்ஷீணீtமீ), புரதம் (றிக்ஷீஷீtமீவீஸீ) மற்றும் கொழுப்பு (திணீt) ஆகிய சத்துகள் அடங்கியுள்ளன. இந்தச் சத்துகள் உணவில் இருந்து பிரிக்கப்பட்டு, உடலில் உள்ள பல கோடி செல்கள் ஆற்றலுடன் செயல்ப அனுப்பி வைக்கப்படுகின்றன.

குறிப்பாக, மாவுச் சத்துதான் குளுக்கோஸ் என்கிற சர்க்கரைச் சத்தாக மாற்றப்படுகிறது. இது குடலில் இருந்து ரத்த ஓட்டத்தில் கலக்கிறது. அங்கிருந்து எல்லா அணுக்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. ரத்தத்தில் இருந்து வரும் இந்தச் சர்க்கரைச் சத்து லமாகத்தான் செல்கள் செயல்படுவதற்கான சக்தி கிடைக்கிறது.

உணவு & உணவின் மூலமாகக் கிடைக்கும் மாவுச்சத்து & மாவுச் சத்து, சர்க்கரைச் சத்தாக மாற்றப்பட்டு ரத்தத்தில் கலப்பது & ரத்தத்தில் உள்ள சர்க்கரைச் சத்து, சக்தியாக மாற்றப்பட்டு செல்களுக்குப் பயன்படுவது & இந்தச் சுழற்சி தடைபடாமல் நடந்து கொண்டிருந்தால் எந்தப் பிரச்னையும் இல்லை. அப்போதுதான் ரத்தத்தில் குளுக்கோஸின் அளவு சீரான நிலையில் இருக்கும். உடலின் ஆரோக்கியத்துக்கு குளுக்கோஸ் சீரான அளவில் இருக்க வேண்டியது மிக அவசியம்.

உணவின் மூலமாக ரத்தத்தில் குளுக்கோஸ் கலந்து கொண்டே இருக்கிறது, ஆனால், ஏதோ ஒரு காரணத்தால் அதை உடல் செல்களால் பயன்படுத்த முடியவில்லை என்றால் அந்த நிலையைத்தான் சர்க்கரை நோய் என்கிறோம்.

 

குளுக்கோஸை ஏன் உடல் செல்களால் பயன்படுத்த முடிய வில்லை. இந்தக் கேள்விக்கான பதிலைச் சொல்ல வேண்டும் என்றால் நாம் கணையம் என்கிற உறுப்பு பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ள வேண்டும்.

நமது உடலில் இயங்கும் நாளமில்லாச் சுரப்பிகளுள் முதன்மையானதாக விளங்கும் கணையம், வயிற்றுப் பகுதியில் தொப்புகளுக்கு மேல், இரைப்பைக்குப் பின்புறம் மாவிலை வடிவத்தில் காணப்படுகிறது. இதயத்தைப் போலவே, கணையமும் நாள் முழுக்கச் செயல்பட்டுக் கொண்டே இருக்கிறது. இரண்டு முக்கியமான வேலைகளின் கணையம் பங்கேற்கிறது.

செரிமான நீரையும் நொதிப் பொருள்களையும் வழங்கி, மாவுச் சத்தைக் கரைத்து அது ரத்தத்தில் கலக்க உதவுகிறது.

 

கணையத்தில் உள்ள லாங்கர்ஹான் திட்டுகள் எனப்படும் செல் தொகுப்பில் ஏறக்குறைய பத்து லட்சம் செல்கள் உள்ளன. இவற்றில் பீட்டா, காமா, ஆல்பா எனப்படும் செல்கள் அடங்கியுள்ளன.

ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையான ஹார்மோனை உற்பத்தி செய்கின்றன. பீட்டா செல்கள், இன்சுலின் என்ற ஹார்மோனைச் சுரக்கின்றன. இந்த இன்சுலின்தான் குளுக்கோஸை எரித்து செல்களுக்குத் தேவையான சக்தியாக மாற்றுகிறது. செல்கள் வளர்வதற்கும், வேலை செய்வதற்கும் தேவையான அளவு சக்தியை சரியான விதிகத்தில் கிடைக்கச் செய்வதற்கு இன்சுலின் ஹார்மோன் மிக அவசியம்.

 

வயிற்றின் அடிப்பகுதியில் மூன்று அவுன்ஸ் கொள்ளளவு கொண்ட இன்சுலின் சுரப்பியானது, உணவு உள்ளே வரும் செய்தியை அறிந்து கொண்டே உடனேயே அதிகமாகச் சுரக்க ஆரம்பித்துவிடுகிறது. ரத்தம் மூலமாக செல்களுக்கு குளுக்கோஸ் செல்லும் அளவும் அதிகரிக்க ஆரம்பிக்கிறது. ஒரு வழியாக செல்களுக்கு குளுக்கோஸ் கிடைத்ததும் பழைய படி ரத்தத்தில் குளுக்கோஸின் அளவு குறைய ஆரம்பித்து விடும்.

 

ரத்தத்தில் தேவைக்கு அதிகமான சர்க்கரை சேரும்போது என்ன ஆகும்? கல்லீரல் அதை கிளைக்கோஜென்னாக மாற்றி சேமித்துக் கொள்கிறது. ரத்தத்தில் குளுக்கோஸின் அளவு குறையும்போது கணையத்தில் சுரக்கும் குளுக்கோஜென் என்கிற ஹார்மோன், இந்த கிளைக்கோஜெனை குளுக்கோஸாக மாற்றுகிறது-. அந்த வகையில் இது இன்சுலினுக்கு எதிரான செயல்பாட்டைக் கொண்டிருக்கிறது.

 

ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவைப் பொறுத்துத்தான் கணையத்தில் ஹார்மோன்களின் சுரப்பு நடக்கிறது. சர்க்கரை அதிகரித்தால் இன்சுலின் சுரப்பு கூடும். சர்க்கரையின் அளவு குறைந்தால் குளுக்கோஜெனின் சுரப்பு அதிகரிக்கும். இப்படி மாறி மாறி சுரந்துதான் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை ஒரே சீரான நிலையில் வைக்கப்படுகிறது.

தொடர்ச்சியாகச் சாப்பிடும்போதெல்லாம் நம் உடலுக்குத் தேவையான குளுக்கோஸ் சத்தை எரிப்பதற்கு வேண்டிய இன்சுலினை, கணையம் உற்பத்தி செய்துகொண்டே இருக்கும்.

கணையம் பாதிக்கப்பட்டு இன்சுலினைச் சுரக்க முடியாமல் போனாலோ அல்லது தேவையான அளவு இன்சுலின் சுரப்பு நிகழவில்லை என்றாலோ குளுக்கோஸ் எரிக்கப்பட்டு சத்தியாக மாறாது. இந்த நிலையில்தான் ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு அதிகமாகி சர்க்கரை நோயாக உருவெடுக்கிறது. இந்த அதிகப்படியான சர்க்கரை சிறுநீரில் கலந்து வெளியேறுகிறது.

 

சர்க்கரை நோயைத் தமிழில் மதுமேகம் என்பார்கள், சர்க்கரைச் சத்து சிறுநீரில் கலந்து வெளியேறுவதால், அது இனிப்புச் சுவையுள்ளதாக மாறும். இதில் எறும்புகள் மொய்ப்பதும் உண்டு. இதனால் இதை சர்க்கரை நோய் என்று கூறுகிறார்கள். டயாபடீஸ் மெல்லிடஸ் என்ற வார்த்தைக்கும் இதே பொருள்தான்.

பொதுவாக, சர்க்கரை நோயை நான்கு வகையாகப் பிரித்துள்ளனர்.

 

1. இன்சுலின் சார்ந்தது

2. இன்சுலின் சாராதது

3. குறைபட்ட சர்க்கரை ஏற்பு ளநிலை (

4. கணையச் சர்க்கரை நோய்

 

என்று நான்கு வகைப்படும்.

 

இன்சுலின் சார்ந்த சர்க்கரை நோய்

கணையத்தில் உள்ள இன்சுலின் சுரக்கும் பீட்டா செல்களில் கோளாறு ஏற்பட்டுள்ளது எனில் இன்சுலின் சுரப்பு பாதிக்கப்படுகிறது. அதாவது கணையத்தில் இன்சுலினைச் சுரக்கும் செல்கள் அழிந்திவிடுவதால் இது தோன்றுகிறது. இதை டைப்&1 வகை நோய் எனக் கூறுகிறார்கள்.

 

சிறுவர்கள் மற்றும் டீன்&ஏஜ் வயதினரைத் தாக்கும் இது பதினாறு வயதுக்குட்பட்டவர்களுக்கு வரும்போது இன வயது சர்க்கரை நோய் என்று அழைக்கப்படுகிறது. சர்க்கரை நோயாளிகளில் சுமார் ஐந்து சதவீதத்தினர் மட்டுமே இந்த நோயினால் பாதிக்கப்படுகிறார்கள்.

நமது உடலில் இயல்பாகவே நோய் எதிர்ப்புச் சக்தி என்பது உண்டு. வெள்ளை அணுக்களால் உற்பத்தி செய்யப்படும் இந்தச் சக்திதான் நோய்க்கிருமிகளை எதிர்த்துப் போராடி அவற்றை அழிக்கிறது. சுற்றுப்புறச் சூழல், பரம்பரை போன்ற காரணிகளால் ஏற்படும் எதிர்மறைத் தாக்கத்தால், வெள்ளை அணுக்கள், கணையத்தில் உள்ள பீட்டா செல்களை எதிரிகளாக நினைத்து அழித்துவிடுகின்றன.

 

இதன் காரணமாக இன்சுலின் உற்பத்தி பாதிக்கப்படுகிறது. சர்க்கரைச் சத்தும் சக்தியாக மாற்றப்படாமல் ரத்தத்தில் சேர்ந்துகொண்டே வருகிறது. மேலே சொன்ன காரணம் மட்டுமின்றி கணையத்தில் ஏற்படும் நோய்களாலும் பீட்டா செல்கள் அழிந்துவிடுகின்றன. இதனாலும் இன்சுலின் உற்பத்தி பாதிக்கப்படுகிறது.

 

இவர்களுக்கு இருக்கிற ஒரே தீர்வு, ஊசியின் மூலமாக இன்சுலினைப் போட்டுக்கொள்வதுதான். ஊசியின் மூலம் உள்ளே வரும் இன்சுலின் ரத்தத்தில் உள்ள அதிகப்படியான சர்க்கரையை எரித்து இயல்பான நிலையைக் கொண்டு வருகிறது.

ஆனால், பிரச்னை என்னவெனில் இத்தகைய நோயால் பாதிக்கப்பட்டவள்£கள், இன்சுலின் ஊசியை நம்பித்தான் தங்களது வாழ்நாளைக் கழிக்க வேண்டும். அவர்களின் அன்றாட வாழ்க்கை முழுக்க முழுக்க இன்சுலின் ஊசியைச் சார்ந்தே அமைவதால்தான் இதனை இன்சுலின் சார்ந்த சர்க்கரை நோய் என்கிறார்கள்.

இந்த வகை சர்க்கரை நோய்க்குக் காரணமான பல்வேறு ஜீன்கள் மற்றும் எண்ணற்ற வைரஸ்களை ஆராய்ச்சியாளர்கள் அடையாளம் கண்டிருக்கிறார்கள். ஆனால், சர்க்கரை நோயை எந்தளப் பொருள் குறிப்பாக உருவாக்குகிறது என்ற விஷயம் மட்டும் இன்னும் ஆய்வு நிலையிலேயே இருக்கிறது.

 

அதிகமான தண்ணீர்த் தாகம், அளவுக்கு அதிகமாக சிறுநீர் கழித்தல், அளவுக்கு அதிகமான பசி, அதிகமளாகச் சாப்பிட்டாலும் உடல் எடை குறைவு, கண் பார்வை மங்குதல், அதிகச் சோர்வு போன்றவை முதல் வகை சர்க்கரை நோய்க்கான முக்கியமான அறிகுறிகள்.

இன்சுலின் சாராத சர்க்கரை நோய்

இதை டைப்&2 அல்லது இன்சுலின் சாராத சர்க்கரை நோய் என்கிறார்கள். இரண்டாம் வகை சர்க்கரை நோயால் சுமார் 95 முதல் 96 சதவீதத்தினர் வரை பாதிக்கப்படுகிறார்கள். இதற்கு முன்பெல்லாம் இந்த நோய் நடுத்தர வயதினருக்கு மட்டுமே வரளக்கூடிய நோய் என்ற கருத்து இருந்தது. ஆனால் சிறுவர்களும், டீன்&ஏஜ் பருவத்தினரும்கூட இந்த நோயால் பாதிக்கப்பட்டிருப்பதும், அவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவதும் சமீபத்தில் கண்டறியப்பட்டுள்ளது.

இரண்டுவிதமான காரணங்களால் இந்த நோய் உருவாகக் கூடும். சில சமயங்களில், சர்க்கரையை எரிப்பதற்குத் தேவையான இன்சுலின் ஹார்மோனை செல்கள் ஏற்றுக்கொள்ளாமல் புறக்கணிக்கக்கூடும். சில சூழல்களில் கணையத்தால் போதுமான அளவு இன்சுலினைச் சுரக்க முடியாது. இதனால், ரத்தத்தில் சர்க்கரையைக் கட்டுப்படுத்தும் திறன் முற்றிலுமாகக் குறைந்து, இரண்டாம் வகை சர்க்கரை நோயை உருவாக்கி விடுகிறது.

 

உடல் பருமனாக உள்ளவர்கள், இரண்டாம் வகை சர்க்கரை நோயால் மிக எளிதாகப் பாதிக்கப்படுகிறார்கள். இவ்வகை ளளநோய்த் தாக்குதலுக்கு ஆளானவர்களில் 80 சதவீதம் பேருக்கு உடல் பருமன் நோய் இருக்கிறது.

இரண்டாம் வகை சர்க்கரை நோயின் போது அறிகுறிகள் மிக மெதுவாக வெளிப்படுவதால், சர்க்கரை நோய் வந்துள்ளது என்பதை அவ்வளவு சுலபமாக யாரும் நம்பிவிட மாட்டார்கள். முதல் வகையில் சொன்ன அறிகுறிகளோடு அடிக்கடி நோய்வாய்ப்படுதல், உடலில் காயங்கள் ஆறாமல் இருத்தல் போன்றவையும் காணப்படும்.

 

கணையத்தின் செயல்பாட்டில் கோளாறு காணப்படுவதாலேயே பெரும்பாலும் இந்த நோய் ஏற்படுகிறது. அதன் செயல்பாட்டை ஊக்குவிக்கும் மருந்துகளைக் கொடுக்கும் பட்சத்தில் இவர்களது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறைகிறது. இன்சுலின் ஊசி போட்டுத்தான் ஆக வேண்டும் என்கிற கட்டாயம் இதில் இல்லை.

 

நடுத்தர வயது உடையவர்கள், பருமனான உடல்வாகு கொண்டவர்கள், உடற்பயிற்சி செய்யாமல் சோம்பலான வாழ்க்கை வாழ்பவர்கள் ஆகியோரையே இந்த நோய் அதிகமாகப் பாதிக்கிறது.

 

குறைபட்ட சர்க்கரை ஏற்பு நிலை

இதை கர்ப்பக் கால சர்க்கரை நோய் என்பார்கள். இந்த வகை சர்க்கரை நோயால் கர்ப்பிணிகளில் இரண்டு முதல் மூன்று சதவீதத்தினர் பாதிக்கப்படுகிறார்கள். கர்ப்பக் காலத்தில் அதிகரிக்கும் சர்க்கரையின் அளவு, பிரசவத்துக்குப் பிறகு இயல்பு நிலைக்குத் திரும்பிவிடும்.

 

கர்ப்பக் கால சர்க்கரை நோய், பொதுவாக கர்ப்பக் காலத்தின் இரண்டாவது கட்டத்தில் அதாவது, ஆறாவது மாதவாக்கில் உருவாகிறது. இது குழந்தை பிறந்த பிறகு சரியாகிவிடுகிறது. பாதிக்கப்பட்ட கர்ப்பிணிகள் பிற்காலத்தில் சர்க்கரை நோயால் அவதியுறும் வாய்ப்பும் அதிகமாக உள்ளது.

 

கர்ப்பக் காலத்தில் சர்க்க்ரை நோய் வந்தால், கர்ப்பக் காலம் முழுவதும் ரத்தச் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்திக் கொள்ளும் வழிமுறைகளை அறிந்து கொள்ள வேண்டும். இதன்மூலம் தாய்க்கும், குழந்தைக்கும் ஏற்படும் பாதிப்புகளைப் பெருமளவு குறைக்கலாம்.

 

கருவுற்ற தாய்மார்களுக்கு சர்க்கரை நோய் ஏற்பட்டால் அவர்கள் பேறு காலத்தில் மட்டும் மருத்துவம் செய்து கொண்டால் போதும். குழந்தைப் பிறப்புக்குப் பிறகு பெரும்பாலும் சர்க்கரையின் ள்வு இயல்பு நிலைக்குத் திரும்பிவிடும்.

 

கணையச் சர்க்கரை நோய்

 

பல்வேறு காணரங்களால் கணைய அழற்சி நோய் ஏற்படலாம். கட்டுப்பாடு இல்லாமல் மது அருந்துவது அவற்றில் ஒன்று. இந்தக் கணைய அழற்சி நோய், பின்னாளில் புற்று நோயாகவும் உருவெடுக்கலாம். கணைய அழற்சி நோயால், அதில் உள்ள லாங்கர்ஹான் திட்டுத் திசுக்கள் பாதிக்கப்படுகின்றன. இதனால், இன்சுலின் உற்பத்தி பாதிக்கப்பட்டு சர்க்கரை நோய் ஏற்படுகிறது.

பிற நோய்களுடன் துணை நோயாகவோ அல்லது மற்ற நோய்களுக்காகச் சாப்பிடும் மருந்துகளின் காரணமாக இன்சுலின்¢உற்பத்தி பாதிக்கப்படுவதாலோ இந்த நிலை தோன்றும். சர்க்கரை நோயாளிகளில் சுமார் ஒரு சதவீதத்தினர் இத்தகைய பாதிப்புக்கு ஆளாகிறார்கள்.

கணைய அழற்சி, அட்ரீனல் அல்லது பிட்யூட்டரி சுரப்பிக் கோளாறுகள், மையோடோனிக் டிஸ்டிரோபி எனப்படும் தசை அழிவு நோய் ஆகியவற்றின் காரணமமாகவும், கார்டிகோ ஸ்டீராய்டுகள் காரணமாகவும் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும்.

 

மேலே சொன்ன காரணங்களால், கணையத்தில் பாதிப்பு ஏற்பட்டு அதனால் இன்சுலின் உற்பத்தி பாதிக்கப்படுகிறது. சிறுநீரகத்தில் பாதிப்பு, இதயத்தில் பாதிப்பு என்றால் பாதிக்கப்பட்ட இந்த உறுப்புகளை அறுவைச் சிகிச்சை மூலமாக மாற்றிக் கொள்வதற்கான வசதிகள் இருக்கின்றன. ஆனால், கணையத்தில் பாதிப்பு எனில் அதை மாற்றி வேறு கணையம் பொருத்த முடியாது.

 

எனவே, இந்த வகை சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களும் இன்சுலின் சார்ந்தே வாழ வேண்டியிருக்கிறது.

 

மேலே சொல்லப்பட்ட ஒவ்வொரு வகைக்கும் தனிப்பட்ட அறிகுறிகள் இருந்தாலும், சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களில் பாதி பேர் தங்களுக்கு நேர்ந்த பாதிப்பு பற்றி உணர்வதே இல்லை. ஏனெனில், சர்க்கரை நோய்க்கான எந்த அறிகுறிகளும் வெளிப்படையாகத் தெரிவதில்லை.

 

அப்படியானால் முன்னரே சுதாரித்துக்கொண்டு சிகிச்சை எடுத்துக்கொள்ளும் வாய்ப்பு சர்க்கரை நோயில் இல்லையா என்று நீங்கள் கவலையோடு கேட்பது புரிகிறது.

 

இருக்கிறது. நமது உடலில் ஏற்படும் மாற்றங்களைச் சற்று உன்னிப்ப்£கக் கவனித்தால் போதும். சர்க்கரை நோய்க்குரிய தனிப்பட்ட அறிகுறிகளை அடையாளம் கண்டுகொள்ள முடியும்.


.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.