Breaking News :

Friday, April 19
.

அடேங்கப்பா கருவேப்பிலை?


கணையம் சீரான முறையில் இயங்குவதற்கும்  பெண்களுக்கு கர்பப்பை சார்ந்த நோய்கள் அனைத்தும் வராமல் தடுப்பதற்கும், 

  சர்க்கரை நோய் வராமல் இருப்பதற்கும் வந்த சர்க்கரை நோயை சமநிலையில் வைத்திருப்பதற்கும் மிகவும் உதவியாக கறிவேப்பிலை இருக்கின்றது என்றால் அது மிகையல்ல இது முற்றிலும் அனுபவ உண்மையே

  அஜீரணத்தை குணப்படுத்தும் ஒரு ஆற்றல் கறிவேப்பிலைக்கு உள்ளதால் அஜீரணத்தால் ஏற்படும் சர்க்கரை நோயை சர்வ சாதாரணமாக  வென்று உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க கறிவேப்பிலைகட்டாயமாக உதவும் இதில் சிறிதும் ஐயமில்லை

கணையம் சீராக இயங்க

 கறிவேப்பிலை நெல்லிக்காய் மஞ்சள் இவை மூன்றையும் பொடி செய்து சம அளவாகக் கலந்து இதில் மூன்று கிராம் எடுத்து காலை மாலை இருவேளையும் தொடர்ந்து சாப்பிட்டு வர கணையம் சீராக இயங்கும் 

 சர்க்கரை நோயால் பாதிப்பு ஏற்பட்டு இன்சுலின் பற்றாக்குறை ஏற்பட்டால் மீண்டும் இன்சுலினை சுரக்கச் செய்து சர்க்கரை நோயின் தாக்கத்தை படிப்படியாக குறைத்து சர்க்கரை நோயின் பாதிப்புகள் அனைத்தையும் முழுமையாக நீக்கும்

அஜீரண நோய் குணமாக

  கறிவேப்பிலை சீரகம் இஞ்சி வகைக்கு ஐந்து கிராம் அளவு எடுத்து அரை லிட்டர் தண்ணீரில் கலந்து கொதிக்கவைத்து கால் லிட்டராக சுண்டக் காய்ச்சி இதில் நூறு மில்லி எடுத்து காலை மாலை இருவேளையும் குடித்து வர எப்பேர்ப்பட்ட நீண்ட நாளாக தொல்லை தருகின்ற அஜீரணம் மற்றும் வயிற்று உப்பிசம் வாயுத்தொல்லை இவை அனைத்தும் வெகு எளிதாக ஓரிரு வார காலங்களில் முழுமையாக குணமாகிவிடும்

அம்மை தழும்புகள் நீங்க

ஒரு கைப்பிடி கறிவேப்பிலை  
கசகசா எட்டு கிராம் கஸ்தூரி மஞ்சள் நான்கு கிராம் இவைகளை ஒன்றாக சேர்த்து இதை அம்மியில் வைத்து அரைத்து அரைத்த விழுதை அம்மை தழும்புகள் உள்ள இடத்தில் தேய்த்து ஒரு மணிநேரம் கழித்து 

  கடலை மாவு மற்றும் குப்பைமேனி இலை பொடியை சமமாக கலந்து இந்த குளியல் பொடியை உடல் முழுவதும் தேய்த்து வெண்ணீர் வைத்து குளித்து வர  இரண்டு வார காலங்களில் உடலிலுள்ள உள்ள அம்மை  தழும்புகள் முழுமையாக மறைந்து விடும்

தலைமுடி நீண்டு வளர

  கறிவேப்பிலை இலையை மைபோல அரைத்து இதில் நூறு கிராம் எடுத்து கொண்டு அரை லிட்டர் தேங்காய் எண்ணெயில் இதை கலந்து 

   லேசான தீயில் காய்ச்சி தைல பதத்தில் வரும்போது இதை இறக்கி பத்திரப்படுத்தி வைத்துக்கொண்டு தலைமுடிக்கு தொடர்ந்து தேய்த்து வர தலை முடியானது கருமையாகவும் அடர்த்தியாகவும் நீண்டும் வளர்ந்து வரும் 

பாத வெடிப்பு நீங்க

  கறிவேப்பிலை மற்றும் மஞ்சள் இவைகளை சம அளவாக சேர்த்து நன்கு அரைத்து இதை பாதத்தில் தொடர்ந்து ஒரு வாரம் செய்து வந்தால் பாதத்தில் உள்ள வெடிப்புகள் நீங்கும் கால் பாதங்கள் பார்ப்பதற்கு அழகாக தோன்றும்

பசி உண்டாக

  கறிவேப்பிலையை நன்றாக அரைத்து ஒரு நெல்லிக்காய் அளவு எடுத்து கால் லிட்டர் பசுமோரில் கலந்து காலை வேளையில் வெறும் வயிற்றில் ஒரு வாரம் குடித்து வர நல்ல பசி ஏற்படும் அஜீரண நோய் நீங்கும் வாயு தொல்லை விலகும்

வாந்தி நோய் குணமாக

  பச்சையாக ஒரு கைபிடி கருவேப்பிலையை பறித்து இதை நன்றாக மென்று விழுங்கி வர தொடர் வாந்தி நோய் முழுமையாக குணமாகும்

சீதபேதி குணமாக

  கறிவேப்பிலையை நன்றாக அரைத்து இதில் ஒரு நெல்லிக்காய் அளவு எடுத்து காலை கால் லிட்டர் எருமைத் தயிரில் கலந்து காலை வேளையில் சாப்பிட்டு வர மூன்றே நாளில் சீதபேதி குணமாகும்

பார்வை சக்தி அதிகரிக்க

  கறிவேப்பிலையை மைபோல அரைத்து ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு எடுத்து வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று நாட்கள் காலை வேளையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர கண்களுக்கு பார்வைத் திறன் அதிகரிக்கும் கிட்ட பார்வை தூரப் பார்வை போன்ற கண் நோய்கள் வருவதைத் தடுத்து நிறுத்தும்

சரும நோய்கள் நீங்க 
  
கறிவேப்பிலை குப்பை மேனி மஞ்சள் இவைகளை சம அளவாக எடுத்து  இதை நன்றாக அரைத்து படை சொறி சிரங்கு போன்ற சரும நோய்கள் உள்ள இடத்தில் பூசி குளித்து வர தோல் நோய்கள் அனைத்தும் முழுமையாக நீங்கும்

குடல்புண் குணமாக

கறிவேப்பிலை இலையில் சிறிது தண்ணீர் தெளித்து இடித்து சாறு பிழிந்து இதே அளவு இதனோடு பீட்ரூட் கிழங்கின் சாறை கலந்து இதில் ஒரு நூறு மில்லி எடுத்து இதை காலை வேளையில் பருகி வர குடல் புண்கள் குணமாகும்

கல்லீரல் பலம் பெற
சர்க்கரை நோய் வராமல் இருக்க

  ஒரு கைப்பிடி கறிவேப்பிலை இலையோடு சின்ன வெங்காயம் மூன்று சேர்த்து மை போல அரைத்து இதை சிறுசிறு உருண்டைகளாக செய்து காலை வேளையில் தொடர்ந்து சாப்பிட்டு வர கல்லீரல் பலம் பெறும் கல்லீரலில் ஏற்படும் நோய்கள் அனைத்தும் நீங்கும் சர்க்கரை நோய் வராத வண்ணம் இது நம்மை பாதுகாக்கும் 

  சர்க்கரை நோய் உள்ளவர்கள் இந்த வைத்திய முறையை கையாண்டால் சர்க்கரையின் அளவு குறையும் 

  சர்க்கரை நோயால் ஏற்படும் பாதிப்புகள் அனைத்தையும் உடலில் வராதபடி தடுத்து நிறுத்தும் ஒரு எளிய வைத்திய முறை இது

ஆரோக்கிய வாழ்வைத் தரும் கருவேப்பிலை அண்ணபொடி

கறிவேப்பிலை மிளகு சீரகம் பெருங்காயம் சுக்கு இவை ஐந்தையும் ஓர் அளவாக எடுத்து லேசாக வறுத்து பொடி செய்து கொண்டு இதில் தேவையான அளவு இந்துப்பு சேர்த்து பத்திரப்படுத்தி வைத்துக் கொண்டு 

  இதில் ஒரு ஸ்பூன் எடுத்து ஒரு கைப்பிடி அன்னத்தில் கலந்து நெய் அல்லது நல்லெண்ணெய் ஒரு ஸ்பூன் விட்டு பிசைந்து காலை வேளையில் தொடர்ந்து தினந்தோறும் சாப்பிட்டு வர உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் 

வாய்வுத் தொல்லை வயிற்று உப்புசம் நீங்கும் அஜீரண நோய் விலகும் நல்ல பசி ஏற்படும் குடல் சார்ந்த நோய்கள் அனைத்தையும் வராதபடி தடுத்து நிறுத்தும்

கருவேப்பிலை இலையோடு சுண்டைக்காய் வற்றல் மிளகு சீரகம் இவைகளை சம அளவாக சேர்த்து சிறிது நல்லெண்ணெய் விட்டு லேசாக வறுத்து பொடி செய்து கொண்டு இதில் சிறிதளவு இந்துப்பு பொடியை சேர்த்து அனைத்தையும் ஒன்றாக கலந்து கொண்டு 

  இதில் ஒரு ஸ்பூன் எடுத்து சூடான சாதத்தில் கலந்து நல்லெண்ணெய் விட்டு பிசைந்து சாப்பிட்டு வர வயிற்றில் ஏற்படும் மந்தம் விலகும் பசி அதிகரிக்கும் நாவில் சுவை கூடும் உடலில் உள்ள நச்சு கிருமிகள் நீங்கும் குடல் சார்ந்த நோய்கள் அனைத்தும்
 விலகும்

மொத்தத்தில் கருவேப்பிலையை தினந்தோறும் பச்சையாகவோ அல்லது பொடியாகவோ செய்து தொடர்ந்து சாப்பிட்டு வர உடலில் ஆரோக்கியம் அதிகரிக்கும் என்பது முற்றிலும் உண்மையே

கறிவேப்பிலையை சாப்பிட்டு வர கபத்தால் ஏற்படும் குற்றம் நீங்கி உடலில் சளி தோன்றாது

கறிவேப்பிலைக்கு உடல் சூட்டை குறைக்கும் ஆற்றல் இருப்பதால் பித்த நோய்கள் உடலில் ஏற்படாது

வாய்வு தொல்லையை நீக்கும் ஒரு மாபெரும் சக்தி கறிவேப்பிலைக்கு இருப்பதால் கறிவேப்பிலையை சாப்பிட்டு வருவோருக்கு வாத நோய்கள் வராது 

  கறிவேப்பிலையை சாப்பிட்டு வந்தால் கை கால் அசதி உடல் வலி போன்ற வாத உபாதைகள் உடலில் ஏற்படாது என்பதை நினைவில் கொள்ளுங்கள் அதனால் நித்தமும் இதை உணவில்  கட்டாயமாக சேர்த்து கொள்ளுங்கள்.


Tags

    .

    Sign up for the Newsletter

    Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.