குறைவான விலையில், அதிக மருத்துவ குணங்கள் நிறைந்த காய்கறிகளுள் வாழைத்தண்டும் ஒன்று. வாழத்தண்டை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், சிறுநீர்ப்பிரச்சனைகள் விரைவில் குணமாகும்.
வாழைத்தண்டின் முக்கியமான பயன்கள் பற்றி இங்கு காண்போம்....
சிறுநீரக பிரச்சினைக்கு சிறந்த மருந்து :
சிறுநீரைக் அடக்கி வைத்திருந்தாலோ, அல்லது நோய் பாதிப்புகளால் சிறுநீர் சரிவர உடலை விட்டு வெளியேறாமல் இருப்பதாலோ அது உடலில் பல பிரச்சினைகளைத் தோற்றுவிக்கிறது.
இன்றைய இளைய தலைமுறையினர் அருந்தும் குடிநீரின் அளவு குறைந்துவிட்டது. அதற்கு பதிலாக ரசாயனங்கள் நிறைந்த குளிர்பானங்களையும், துரித உணவுகளையுமே உட்கொள்கின்றனர். இதனால் சிறுநீரக தொடர்பான நோய்களுக்கு அதிக அளவில் ஆளாகின்றனர். அதிக மசாலா சேர்க்கப்பட்ட காரமான உணவு, மிகக் குறைவாக நீர் அருந்துதல், வறட்சியான உணவு, மது அருந்தும் பழக்கம் போன்றவற்றினால் சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகின்றன. அதேபோல் சரியான நேரத்தில் சிறுநீரை வெளியேற்றாமல் அடிக்கடி சிறுநீரை அடக்குதாலும் சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகின்றன.
வாழைத்தண்டானது உடலின் தங்கி இருக்கும் தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுகிறது. சிறுநீரகக் கல் பிரச்சினை உள்ளவர்கள் தினசரி வாழைத்தண்டு ஜூஸ் பருகி வந்தால், சிறுநீரக கல் கரைந்து காணமல் போகும்.
சிறுநீரக கற்கள் உள்ளவர்கள் வாழைத்தண்டை வாரத்திற்கு மூன்று முறை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.
மாதவிடாய் கோளாறுகள்
பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் கோளாறுகளால் ஏற்படும் அதிகப்படியான ரத்தப்போக்கை கட்டுப்படுத்த வாழத்தண்டு சிறந்த மருந்தாக பயன்படுகிறது. இதனால் அவர்களது உடலும் பலம் பெறும்.
அதுமட்டுமல்லாமல், வயிற்றுப் புண்ணைக் குணப்படுத்தும் சக்தியும் இதற்கு இருக்கிறது.
நீரிழிவு நோயாளிகள்
வாழைத்தண்டில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. எனவே உடல் பருமனால் அவதிப்படுபவர்கள், ரத்தத்தில் கொழுப்புச் சத்து அதிகரித்து இருப்பவர்கள் இதை அடிக்கடி உணவாக எடுத்துக்கொள்ளலாம். நீரிழிவு நோயாளிகள் வாழைத்தண்டை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.
கல்லீரல் பாதிக்கப்பட்டவர்களுக்கு கண்கண்ட மருந்து :
மது, புகை போன்ற தீய பழக்கங்களால் அடிமைப் பட்டவர்களின் கல்லீரல் அதிகம் பாதிக்கப் பட்டிருக்கும். ஈரல் பாதிப்பினால் கண் பார்வைக் கோளாறு, காமாலை நோய் தாக்கும். இவர்கள் வாழைத்தண்டை சூப் செய்து அருந்தி வந்தால், கல்லீரல் மீதான் பாதிப்பு சற்று குறையும்.
உடல் பருமனால் அவதிப்படுபவர்கள் வாழைத்தண்டு சூப் செய்து தினமும் அருந்தி வந்தால் உடல் பருமன் குறையும்.
தோல் நோய்களைக் குணப்படுத்தும்.
உடலில் நச்சுப் பொருட்கள் கலந்திருந்தால் விரைவில் குணமாக்கும்.
.
அடேங்கப்பா வாழைத்தண்டின் பலன்கள்?
.