குளிக்காமல் எந்த காரியத்தையும் செய்ய மனதே வராது அல்லவா...வெளியில் கூட செல்ல முடியாது அல்லவா..? சரி ஒரு சிலர் காக்கா குளியல் போட்டு உடனே வெளியில் வந்து விடுவார்கள்....
குளிக்கும் முறையில் கூட ஒரு சில முறைகள் உள்ளது.. நாம் எப்படி குளிக்க வேண்டும் என்பதை பார்க்கலாம் வாங்க...
#குளியல் = குளிர்வித்தல்.
மனிதர்களுக்கு உள்ள 75% நோய்களுக்கு காரணம் அதிகப்படியான உடல் வெப்பம் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். உடலில் அதிகமாக உள்ள வெப்பத்தை குளியல் மூலம் எப்படி வெளியேற்ற முடியும் என்பதை பார்க்கலாம்
இரவு தூங்கி எழும்போது நமது உடலில் வெப்பக்கழிவுகள் தேங்கியிருக்கும். காலை எழுந்ததும் இந்த வெப்பக்கழிவை உடலில் இருந்து நீக்குவதற்காக குளிந்த நீரில் குளிக்கிறோம்.
பொதுவாகவே வெந்நீரில் குளிக்க கூடாது. ஆனால் குளிர் காலத்தில் வெந்நீரில் குளிக்கலாம்.
#எப்படி குளிப்பது?
காலையில் குளிக்கும்போது, சுடுநீரைப் பயன்படுத்தாமல், சாதாரண நீரையே பயன்படுத்தவேண்டும், நீரை முதலில் காலில் இருந்து ஊற்றி, பிறகு தொடை மற்றும் இடுப்பில் அதிக நீர் ஊற்றி, தண்ணீரின் அந்த வெப்பநிலையை, உடல் ஏற்க தயார்செய்யவேண்டும், மாறாக, தலையில் நேரடியாக தண்ணீரை ஊற்ற, திடீர் குளிரால் ஏற்படும் வெப்ப மாறுதலால், சுவாசம் பாதிக்கும் நிலை உண்டாகி, வாயால் மூச்சு விடும் நிலை ஏற்பட்டு, உடல் இயக்கம் சற்று பாதிக்கும் வாய்ப்பு உண்டாகிவிடும், மேலும், குளிக்கும்போது எப்போதும், சிறிது நீரை உச்சந்தலையில் ஊற்றிவிட்டு, அதன்பின் குளியலைத் தொடங்குதல், நலம்.
ஏன் காலிலிருந்து தொடங்க வேண்டும்?
உடலின் தலைமைச் செயலகம், மூளையாகும், காலில் இருந்து நீரை ஊற்றி குளித்துவரும்போது, உடலின் வெப்பம் மூக்கு மற்றும் கண்கள் வழியே வெளியேறும், மாறாக தலையில் ஊற்றிக் குளிக்கும்போது, உடலில் உள்ள வெப்பம் மற்ற பாகங்களின் வழியே வெளியேற வாய்ப்பில்லாமல், தலையில் சேர்ந்து, அதனால், உடல் சூடு அதிகரித்து விடுகிறது. இப்படி எத்தனை முறை குளித்தாலும், உடல் சூடு தீர்வதில்லை, எனவே இதனைத் தவிர்க்க, காலில் இருந்து குளியலைத் தொடங்கவேண்டும்.
எலும்பு பலம் :
இதை, ஆற்று நீரில் குளிக்கும்போது, நாம் உணர முடியும், முதலில் நம் கால்கள் நீரில் படுகின்றன, படிப்படியாக, முழங்கால், இடுப்பு, மார்பு , முகம் பின்னர் நீரில் தலையை மூழ்கிதானே, குளிக்கிறோம். மேலும் முன்னோர் ஆற்றின் நீரோட்டத்திலேயே நீராட வேண்டும், குளிக்கும் போது, உதிக்கும் சூரியனைப் பார்த்து குளிக்க, உடலுக்கு அத்தியாவசியமான வைட்டமின் D, நேராக நம் உடலில் சேர வாய்ப்பாகும் என்பர்.
#இயற்கை சோப்புகள் :
மேலும், உடல் வியர்வை பாதிப்பைப் போக்க, இரசாயனங்களால் அதிக வாசனை ஏற்றப்பட்ட சோப்புகளைப் பயன்படுத்த, அதில் உள்ள கெமிக்கல்ஸ் நன்கு நீர் ஊற்றி உடலை அலசாத இடங்களில் சேர்ந்து, சரும வியாதிகளை உண்டாக்கிவிடும். இதேபோல, ஷாம்பூக்களையும் தவிர்த்தல் நலம், அவற்றில் உள்ள இரசாயனங்கள் தலையை சூடாக்கிவிடுவதோடு மட்டுமல்லாமல், தொடர்ந்து உபயோகித்துவர, உடலை பாதிக்கக்கூடியது. இதேபோல இயற்கை சோப்புகள் என்று வாசனை எண்ணை சேர்த்த சோப்களும், மேற்கண்ட பாதிப்புகளை அளிக்கும் என்பதால் கவனம் தேவை.
#இயற்கை நார் :
முதுகை, இயற்கை நார்கள் உள்ள தேய்ப்பான்களால் நன்கு தேய்த்து குளிக்கவேண்டும், அதேபோல, இடுப்பின் முன்புறம் மற்றும் பின்புறம், கை கால்களில், நகங்களின் இடுக்குகள் இவற்றை எல்லாம் நன்கு தேய்த்து குளிக்க வேண்டும்.
#இயற்கை ஸ்க்ரப் :
உடலில் தேய்த்து குளிக்க இயற்கை பச்சைப்பயிறு மாவு, கடலைமாவு இவற்றை சிறிது மஞ்சள் சேர்த்து தேய்த்து குளித்து வந்தாலே போதும், உடல் அழுக்கும் நீங்கி, தொற்று பாதிப்புகளும் விலகிவிடும். இதுபோல, தலைக்கு குளிர்ச்சியூட்டும் சந்தனாதித் தைலம் அல்லது செம்பருத்தித் தைலம் தடவி குளித்துவர, உடல் சூடு தணிந்து, தலைமுடி உதிர்தல் நின்று, தலைமுடி நன்கு வளரும்.
எப்போது குளித்தல் நலம்?
நாம் குளிப்பது, உடலை குளிர்விக்க, உடல் அழுக்கு நீக்குவது மறுபுறம், முதல் கடமை உடலின் வெப்பத்தை போக்க, உடலை குளிர்விக்க வேண்டும்.
அதிகாலைவேளையில் குளிப்பது, உடலுக்கு ஆரோக்கியம் மட்டுமல்ல, மனதில் எழுச்சியையும் தரும். அதேபோல, நீச்சல்குளங்கள், தண்ணீர்த்தொட்டிகளில், குளிப்பதை தவிர்க்கவேண்டும், அழுக்குநீர் சருமத்துக்கு கெடுதல் விளைவிக்கக்கூடும். இதனால், உடலின் பித்தத்தால் உண்டான சூடு விலகி, சுறுசுறுப்பும் புத்துணர்ச்சியும் ஏற்படும்.
#குளித்தவுடன் ஆடை அணியக் கூடாது :
குளித்தவுடன், உடனே உடைகளை அணியாமல், சற்றுநேரம் ஈரத்துண்டுடன் இருப்பது, உடலில் உயிர்காற்றை சீராகப் பரவச்செய்து, மன நலம் பாதித்தவர்களைகூட, நலம் பெற வைத்துவிடும் என்கின்றனர். இதுபோன்ற முறைகளில், அலுவலகப்பணிகளால், பயணங்களால் ஏற்பட்ட சோர்வைப்போக்க, குளித்து வர, உடனே புத்துணர்ச்சி கிட்டும், மேலும், உடல் அசதியோடு, உடல் சூடும் நீங்கிவிடும்!