குடைமிளகாய் வெங்காய பக்கோடா - Capsicum Onion Pakoda

capsicum-onion-pakoda
குடைமிளகாய் வெங்காய பக்கோடா - Capsicum Onion Pakoda

தேவையான பொருட்கள்

 

2 குடைமிளகாய்

2 வெங்காயம்

5 பூண்டு பற்கள் தட்டியது

3/4 டீஸ்பூன் மிளகாய்த்தூள்

1/4 டீஸ்பூன் மஞ்சள்தூள்

1 கப் கடலை மாவு

1 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு

சிறிது கொத்தமல்லி தழை

சிறிது கறிவேப்பிலை

உப்பு தேவையான அளவு

எண்ணெய் பொரிக்க

 

செய்முறை

 

1. குடைமிளகாய் நன்றாக கழுவி நடுவில் இருக்கும் விதைகளை நீக்கி நீளமாக நறுக்கவும். வெங்காயத்தையும் நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.

 

2. ஒரு அகலமான பாத்திரத்தில் நறுக்கிய குடைமிளகாய், வெங்காயம், தட்டிய பூண்டு, கடலைமாவு, அரிசி மாவு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.

 

3. பின் சிறிது தண்ணீர் தெளித்து பிசைந்துக் கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் சிறு சிறு உருண்டைகளாக எடுத்து மெதுவாக உதிர்த்து போடவும். 

 

4. மிதமான சூட்டில் வைத்து பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். சுவையான குடைமிளகாய் வெங்காய பக்கோடாவை சூடான டீயுடன் பரிமாறவும்.