மருந்தில்லா மருத்துவம்,-அக்குபஞங்சர்

acupuncture
Acupuncture

அக்குபஞ்சர் என்பது லத்தீன் மொழியில் அகுஸ் (ஊசி), பஞ்சர் (குத்துதல்) என்ற இரு வார்த்தைகளைச் சேர்த்து உருவான சொல். ஊசியால் குத்துவதன் மூலமாக, உடலில் இருக்கக்கூடிய உயிர் ஆற்றல் பாதைகளில் நேரக்கூடிய அடைப்புகளைச் சரிசெய்வதுதான் அக்குபஞ்சரின் அடிப்படை. மேலும், இது மருந்தில்லா மருத்துவமுறை. சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்பாக தோன்றிய பழமையான சிகிச்சையாகும். மனித உடலானது ஜம்பூதங்களால் ஆனது என நம் முன்னோர்கள் சொல்வார்கள். அது போல மனித உடலில் 14 உயிர்சக்தி, 12 இரட்டை பாதைகள் உள்ளன. 76000 அக்குபஞ்சர் புள்ளிகள் மனித உடலில் உள்ளது.

மருத்துவ அறிவியலைப் பொறுத்தவரை உடற்கூறியல், உடலியக்கவியல், நோய்க்குறியியல், குறை களைவது ஆகிய நான்கு அடிப்படைகள் அவசியம். அக்குபஞ்சருக்கும் இத்தகைய நான்கு அடிப்படைகள் உண்டு. அந்த வகையில் இந்தப் பூமியின் தலையாய மருத்துவ முறை அக்குபஞ்சர்தான். தர்க்கவாதம், நடைமுறை இரண்டுக்கும் பொருந்தக்கூடிய மருத்துவம் இது.

முதலில் நாடிபரிசோதனையில் எந்த உறுப்பின் இயக்கம் குறைந்துள்ளது என்பதை கண்டறிய முடியும். இரண்டாவது அந்த உறுப்பின் இயக்கத்தை வைத்து எந்த உறுப்பின் இயக்கம் பாதிக்கின்றது என்பதை கண்டறியவேண்டும். மூன்றாவது அந்த பாதிப்பை சரிசெய்யும் புள்ளியையும், நான்காவது அந்த புள்ளியை எதற்காக தேர்வு செய்தோம் என்பதிலும் நமக்கு தெளிவு வேண்டும். ஜந்தாவது அந்த புள்ளி நோயை எவ்வாறு சரி செய்கிறது என்பதில் தெளிவு வேண்டும். ஆறாவது அந்த புள்ளிக்கும் நோய்க்கும் உள்ள தொடர்பு என்ன என்பது தெரிய வேண்டும். ஏழாவது அந்த புள்ளி குணமாக்கும் என்பதில் நமக்கு தீவிரமான உறுதிவேண்டும். நாடி பரிசோதனையை காலையில் மட்டுமே செய்ய வேண்டும். வெறும் வயிற்றில் எதுவும் சாப்பிடாமல் மட்டுமே பரிசோதனை செய்யவேண்டும்.

ஒன்று அல்லது இரண்டு ஊசிகளுக்கு மேலாக பயன்படுத்தக்கூடாது. மருந்து மாத்திரைகளை கண்டிப்பாக நிறுத்த வேண்டும் ஒரு வாரம் அல்லது பதினைந்து நாட்களுக்கு பின்னர்தான் அடுத்த சிகிச்சை தர வேண்டும். அக்குபஞ்சர் சிகிச்சை மேற்கொள்ளும் போது எலக்ட்ரானிக் சாதனங்கள் பயன்படுத்தவேண்டாம். பிற மருந்துகள், சிகிச்சைகளை பயன்படுத்தக்கூடாது.

அக்குபஞ்சர் நாடிப் பரிசோதனையின் மூலம் மட்டுமே ஒரு நோயாளியின் அனைத்துக் கஷ்டங்களுக்கும் காரணமான அந்த ஒரே ஒரு புள்ளியின் ரகசியத்தை அறிந்து செயல்பட முடியும்.

“ஒரு நோயாளி ஒரு சமயத்தில் கூறக்கூடிய அனைத்துக் கஷ்டங்களுக்கும் காரணமான ஒரே ஒரு புள்ளியைத் தேர்ந்தெடுத்து, அதன் மூலம் சுகமளிக்க முற்படுபவர் மட்டுமே உண்மையான அக்கு பஞ்சர் நிபுணர் ஆவார்.

உயிர் ஆற்றலை நேர்மறை, எதிர்மறை ஆற்றல்களாக சீன முறையில்யின், யான் ஆகப் பார்க்கிறது அக்குபஞ்சர். இவற்றின் இணைவுதான் இயக்கம். ‘யின்’ என்பது பெண். பெண்மை, குளிர்ச்சி, கருமை என வகுக்கப்பட்டுள்ளது. யான் என்பது ஆண். ஆண்மை, வெப்பம், உறுதி, வெளிச்சம் என வகுக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு அம்சங்களுக்கு இடையிலான சமன்குலைவு, நோய் என வரையறுக்கப்பட்டுள்ளது.

உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்றையும் பரிசீலனை செய்து சிகிச்சை தருவதுதான் அக்குபஞ்சர். இதில் பயன்படுத்தப்படும் ஊசி ஆத்மாவையும் தொடுகிறது.

அறுவைசிகிச்சை இல்லாமல் எப்படி நோய்களை குணப் படுத்த முடியும்? எப்படி அது சாத்தியம்? என்று கேட்கிறார்கள் மனித உடலில் நகம், முடி ஆகியவை வெட்டி எடுக்ககூடிய உறுப்புகள். மற்றவைகளை வெட்டக்கூடாது. அப்படி அறுவைசிகிச்சை முறையில் நீக்குவது தீர் வாகாது அது மேலும் பல பாதிப்புகளை ஏற்படுத்தும்.அக்கு பஞ்சர் முறையில் கத்தியில்லா பைபாஸ், பித்தக்கல், கிட்னி கல் ஆகியவற்றை இயற்கையாகவே அக்குபஞ்சரில் வெளியேற்றமுடியும். அக்குபஞ்சர் மனம், உடல் ஆற்றல் என மூன்றையும் மேம்படுத்தி நோய்களை நிவர்த்திசெய்கிறது