பெண்களின் மார்பக புற்றுநோய் தடுக்கும் பசலைக்கீரை!

pasalai-keerai-health-tips
பெண்களின் மார்பக புற்றுநோய் தடுக்கும் பசலைக்கீரை!

பொதுவாக கீரைகள் என்றாலே , ஆரோக்கியமான உணவு தான் . ஆனால் , அதில் சில கீரைகள் அதிகப்படியான பலன் தரும் என , ஆய்வுகள் கூறுகின்றன . அப்படிப்பட்ட கீரைகளில் ஒன்று தான் , பசலைக்கீரை . இதன் பூர்வீகம் , ஈரான் . அடர்பச்சை நிறத்திலிருக்கும் இதில் சிறிதளவு கசப்பு தன்மையும் இருக்கும் . இதை பச்சையாகவோ , சமைத்தோ உண்ணலாம் . வைட்டமின் ஏ , சி , கே , பி 6 , பி 9 , இ , இரும்புச்சத்து , கால்சியம் , மக்னீசியம் , மாங்கனீசு , நீர்த்த நார்ச்சத்து மற்றும் 30 வகையான பிளேவனாய்டுகள் உள்ளன . இதை தவறாமல் உணவில் சேர்த்துக் கொள்ள ஜலதோஷம் , காய்ச்சல் மற்றும் புற்றுநோயில் இருந்து தப்பிக்கலாம் .

 நுாறு கிராம் பசலைக்கீரையில் , 15 மில்லி நைட்ரேட் உள்ளது . இது , ஸ்ட்ரோக் அல்லது இதய நோய் தாக்கும் ஆபத்திலிருந்து பாதுகாக்கிறது . மேலும் , 35 சதவீதம் , 50 வயதிற்கு மேல் வரும் மாகுலர் டி ஜெனரேஷன் குறைபாட்டால் வரும் , பார்வை இழப்பை தவிர்க்க உதவும் என்கின்றனர் , ஹார்வர்டு பல்கலைக்கழக ஆய்வாளர்கள்.

நைட்ரேட் சத்து அதிகமுள்ள அதிகம் எடுத்துக் பசலைக்கீரையை கொள்பவர்கள் , மலை ஏற்றம் , சைக்கிளிங் போன்ற விளையாட்டுகளில் சிறந்து விளங்குவர் . இதிலுள்ள செலினியம் , நியாசின் மற்றும் ஒமேகா 3 ஆகியவை , மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது . நீரிழிவு நோய் உள்ளவர்கள் பருப்புடன் கடைந்து சாப்பிட , ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையும் . பசலைக்கீரையிலுள்ள பிளேவனாய்டு மற்றும் ஆன்டி ஆக்சிடன்ட்கள் நாள்பட்ட நோய்களுக்கு பயனளிக்கும் . குறிப்பாக , புரோஸ்டேட் கேன்சர் , பெண்களின் மார்பக புற்றுநோய் , குடல் மற்றும் சினைப்பை புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராடும் . எலும்பு மெலிவு நோயை தவிர்க்க , பசலைக்கீரை சாப்பிட பரிந்துரைக்கிறது ,

நேஷனல் ஆஸ்டியோபோரோசிஸ் பவுண்டேஷன் . காரணம் , அதிலுள்ள அதிகப்படியான கால்சியம் , வைட்டமின் கே , மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் ஆகியவை , எலும்பு தேய்மானத்தை குறைப்பதுடன் கை , கால் மூட்டுகளில் பிரச்னை வராமல் தடுக்கும் . அதிக நீர்ச்சத்துள்ள கீரை என்பதால் , உடலை நீரோட்டத்துடன் வைக்க உதவுகிறது . மேலும் , இதிலுள்ள நீர்த்த நார்ச்சத்து , உடல் உஷ்ணத்தால் வரும் மூத்திர கடுப்பு , நீரடைப்பு , வெள்ளை ஒழுக்கு மற்றும் மாதவிடாய் கோளாறுகளையும் சரி செய்யும் . இக்கீரையிலுள்ள அதிகப்படியான பச்சையம் , உடலிலுள்ள கொழுப்பை கரைக்கும் தன்மை கொண்டது . இது , உடல் எடையை குறைக்க உதவுகிறது .

வீக்கங்களை குறைக்கும் , அழற்சி எதிர்ப்பு பண்புகள் , மைக்கிரேன் தலைவலி , ஆஸ்துமா மற்றும் முடக்கு வாதம் போன்றவற்றால் வரும் வேதனைகளை குறைத்து , நோய் தீர உதவுகிறது . குளிர் காலத்தில் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் , சருமம் உலர்ந்து போகாமல் இருக்கவும் உதவுகிறது . அதேவேளை , கோடை காலத்தில் , அல்ட்ரா வயலட் கதிர்வீச்சு அபாயத்திலிருந்து பாதுகாப்பு அளிக்கிறது . இக்கீரையை சாறு எடுத்து தவறாமல் குடித்து வர , வயது ஆக ஆக , முகத்தில் ஏற்படும் கிழட்டுத்தனத்தை முன் கூட்டியே தடுத்து விடமுடியும் . பசலைக்கீரை சாற்றை முகப்பருக்கள் மீது பூசி வர , அவை மறைந்துவிடும் . பசலைக்கீரையை பச்சையாக , ஒரு நாளைக்கு , 100 கிராம் மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும் .

அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொண்டால் , வாயுத்தொல்லை ஏற்படும் . வாதநோய் , தைராய்டு மற்றும் சிறுநீரக கோளாறு உள்ளோர் , தவிர்க்கவும்