இஞ்சி பச்சைமிளகாய் பச்சடி செய்வது எப்படி?

inji-pacha-milaka-pachadi-cooking-tips
இஞ்சி பச்சைமிளகாய் பச்சடி செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்

 

பொடியாக நறுக்கிய இஞ்சி - 1/2 கப்

பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் - 1/2 கப்

புளி - பெரிய எலுமிச்சை அளவு

மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்

பெருங்காயத்தூள் - 1/2 டீஸ்பூன்

சாம்பார் பொடி - 1/2 டீஸ்பூன்

கடுகு உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்

வெந்தயம் - 1/4 டீஸ்பூன்

மிளகாய் வற்றல் - 1

துருவிய வெல்லம் - 3 டேபிள் ஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிதளவு

நல்லெண்ணெய் - 1/4 கப்

உப்பு - தேவையான அளவு

 

செய்முறை

 

புளியை சூடான நீரில் ஊறவைத்து 1 கப் தண்ணீர் ஊற்றி கரைத்துக் கொள்ளவும்.

கடாயில் நல்லெண்ணெய் விட்டு சூடானதும் வெந்தயம் சேர்த்து பொரிந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு தாளித்து கிள்ளிய மிளகாய் வற்றல் சேர்க்கவும். 

 

பின் நறுக்கிய இஞ்சியை  சேர்த்து  முறுகலாகும் வரை வதக்கி நறுக்கிய பச்சைமிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

 

பச்சை மிளகாய் வதங்கியதும் புளிக்கரைசலை சேர்த்து தேவையான அளவு உப்பு மற்றும் மஞ்சள்தூள் சேர்த்து பத்து நிமிடங்கள் மூடி வைக்கவும்.

பின் வெல்லம், பெருங்காயத்தூள் சேர்த்துக் கொள்ளவும்.  கடைசியாக சாம்பார் பொடி சேர்த்து  சில நிமிடங்கள் எண்ணெய் பிரியும் வரை கொதிக்க வைத்து இறக்கவும்