நுரையீரல் சளியை அகற்றும் வீட்டு வைத்தியம்?

lungs-cold-health-tips
நுரையீரல் சளியை அகற்றும் வீட்டு வைத்தியம்?

இன்றைய காலக்கட்டத்தில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதால், சாதாரண காய்ச்சல் மற்றும் சளி போன்ற பிரச்சனைகள் கூட பெரும் தொந்தரவாக மாறுகின்றன. குறிப்பாக, நுரையீரலில் அதிகளவில் சளி தேங்கியிருப்பது மூச்சுத் திணறல், மூக்கடைப்பு, தலைவலி, இருமல் போன்ற பல பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். நீண்ட காலமாக இந்த நிலை நீடித்தால், அது ஆஸ்துமா மற்றும் சைனஸ் போன்ற ஆபத்தான நோய்களை உருவாக்கக்கூடும்.   இதனை சரிசெய்வதற்காக, இந்த பாரம்பரிய வைத்திய முறையைப் பயன்படுத்தி, உடலில் தேங்கியுள்ள சளியை விரைவாக வெளியேற்றலாம்.

தேவையான பொருட்கள்:
    சுக்கு
    கொத்தமல்லி விதைகள்
    மிளகு
    துளசி
    வெற்றிலை
    தேன்

தயாரிக்கும் முறை:

முதலில் ஒரு கடாயில் சுக்கு, மிளகு மற்றும் கொத்தமல்லி விதைகளை லேசாக வறுக்கவும். பிறகு, அவற்றை ஆறவைத்து, நன்றாக பொடியாக அரைத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொதிக்க வைத்து, அதில் வெற்றிலை மற்றும் துளசி இலைகளை சேர்க்கவும். அதன்மேல், அரைத்த சுக்கு, மிளகு மற்றும் கொத்தமல்லி பொடியை ஒரு டீஸ்பூன் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.  பின்னர், அந்த நீரை வடிகட்டி, தேன் கலந்து பருகவும்.

பயன்கள்:

இந்த பானத்தை தினமும் காலையில் டீ அல்லது காபிக்கு பதிலாக குடித்து வருவதால், நுரையீரலில் தேங்கி இருக்கும் சளி கரைந்து வெளியேறும். இது மூச்சு விடுவதற்கு வசதியாக இருக்கும், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கச் செய்யும். இந்த இயற்கை மருத்துவத்தைப் பயன்படுத்தி, சளி பிரச்சனையை எளிதில் தீர்த்துக் கொள்ளலாம்!

இதுபோன்று எண்ணற்ற வீட்டு மருத்துவ குறிப்புகளை அறிந்து கொள்ள மருத்துவர் சிவராமன் எழுதிய நாட்டு மருந்து கடை என்ற புத்தகத்தை வாங்கி படியுங்கள்.