எந்த கீரை சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு?
எல்லாக் கீரைகளும் உடலுக்கு, கண்ணுக்கு , தோலுக்கு, வயிற்றுக்கு, இரத்தத்திற்கு எல்லாவற்றிற்குமே நல்லதுதான்.
# பொன்னாங்கண்ணி கண்ணுக்கும்,
# முடக்கத்தான் மூட்டுகளுக்கும,
# முருங்கை தசை வளர்ச்சி, எதிர்ப்பு சக்தி கூடுதல், மலச்சிக்கல் நீங்குதல், வயிற்று வலி நீக்கம் ஆகியவற்றிற்கும்,
# வல்லாரை நினைவாற்றல் வளரவும்,
# முளைக்கீரை கண்கள், இதயம், தலை முடி இவைகள் நலம் பெறவும்,
# அரைக்கீரை கர்ப்பிணிப் பெண்களின் இரத்தச் சிவப்பணுக்களைப் பெருக்கி அனீமியா வராது தடுக்கவும்,
# சிறு கீரை தோல் வியாதிகள் குணமாகவும் வாய் / வயிற்றுப் புண் போகவும் , பாடகர்கள் குரல் வளம் பெருகவும்
#புளித்த ( கோங்குரா ) கீரை வயிற்று நலத்திற்கும்
# பசலைக் கீரை இரத்த சுத்திக்கும்
# மணத்தக்காளிக்கீரை வயிற்றுப் புண்(ulcer) சரியாகவும்
# பாலக் இரத்த விருத்திக்காகவும்
# புதினா, வாந்தி (nausea), ஒற்றைத் தலைவலி,வாய் துர்நாற்றம் ஆகியவற்றில் இருந்து மீளவும் —
மிகவும் நல்லவை. .
கறிவேப்பிலையும் கொத்துமல்லியும் கீரை போல்தான். அவற்றின் நன்மைகள் அளவிட முடியாது. தினமும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். நமது நல்ல காலம், கறிவேப்பிலையை நிறையவே இலவசமாக வைத்து அள்ளிக் கொடுக்கிறார்கள்.
சாம்பார் , கூட்டு, மோர்க்குழம்பு இவைகளில் கறிவேப்பிலையை சேர்த்து அரைத்து விடுவேன், சத்து வீணாகாது. இலையைத் தூக்கி எறிவது பிடிப்பதில்லை.
புதினாவை பாலூட்டும் தாய்மார்கள் பயன்படுத்தினால் பால் வரும் அளவு குறையலாம். அதனால் தவிர்க்கவும். சிலருக்கு கீரை சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு உண்டாகும். அவர்கள் கவனமாகச் சாப்பிடலாம். பழகினால் சரியாகலாம்.
ஒரு வாரத்தில் தினமும் ஏதோ ஒரு கீரை அளவாகச் சாப்பிடலாம் . ஒருநாள் விட்டு ஒரு நாள் சாப்பிட்டாலே போதும். பருப்புடன் சேர்த்து சமைக்கலாம். சூப் வைக்கலாம். தக்காளி சேர்த்து மசிக்கலாம். பச்சைப் பெருங்காயம் முளைக் கீரையுடன் சேரும்போது அவ்வளவு மணம்!
ஒரு போதும் இரவு நேரத்தில் கீரை சாப்பிட வேண்டாம், இரும்புச் சத்து செரிக்க நேரமெடுக்கும். வாயுத் தொல்லை உண்டாகலாம்.