காமம் குறித்தான கல்வி அவசியம் ஏன்?
நம் முன்னோர்களின் முன்னோர்கள் காமம் குறித்து இது ஒரு இயற்கையான முக்கியமான நிகழ்வு என்று காமத்தை கொண்டாடித்தான் வாழ்ந்திருக்கிறார்கள்.
இதற்கு உதாரணங்கள் நம் கோயில்கள், சிற்பங்கள். ஆனால் சில நூற்றாண்டுகளாக காமம் என்பது மறைக்கவேண்டிய, அவமான விஷயமாக திரித்து, செய்யக்கூடாத குற்றம்போல் மாற்றிவிட்டார்கள். காமம்குறித்தான கல்வி அவசியம் அனைவருக்கும் தேவைப்படுகிறது.
குழந்தைகள் பதின்ம பருவத்தை அடையும் போது முக்கியமாக ஆண் குழந்தைகள் என்ன தான் நம் உடலில்
நடக்கின்றது, ஏன் இவ்வாறு மனம் மாறுகிறது என்று அவர்கள் திண்டாடுகிறார்கள்.
பெண் குழந்தைகளை கற்பு என்று பயத்தை ஏற்படுத்தி வீட்டில் அடைத்து விடுவார்கள்.
ஆனால் ஆணிற்கு இதை பற்றி சொல்லிக்கொடுக்க பெற்றோர்களும் தயங்குவதால், அதல்லாம் காலம் வரும் போது அவர்களே;கற்று கொள்வர்கள் என்று சமூகமும் அவனை கைவிடுகிறது.
அது மட்டும் இல்லாமல் ஆணோ, பெண்ணோ திருமணம் வரை பாலியல் பற்றி தெரிந்து கொள்ளாமல் இருக்கவே பெற்றோர்கள் ஆசைப்பட்டு அவர்களை வளர்க்கிறார்கள் ஆனால் எதை மூடிவைக்கிறோமோ அதை திறந்து பார்க்கவே மனித மனம் ஏங்குகிறது;
இதனால் அந்த வயதில் அவர்கள் பல தவறான வழிகளை தேர்வு செய்து வாழ்க்கையை துளைக்கும் அபாயமும் நிகழ்கிறது.
பெண்ணை போலவே ஆணிற்கும் மாதாந்திர சுழற்சி அவன் உடலில் ஏற்பட்டு விந்து வெளியேற்றம் நடைபெறுகிறது என்று அறிவியல் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
காம உந்துதல் அனது ஒரு ஆணின் மீது ஒரு பெண்ணுக்கோ, ஒரு பெண்ணின் மீது ஆணுக்கோ ஏற்படும் இனக்கரவர்ச்சியை காதல் என்று தவறாக புரியப்படுகிறது.
இனக்கரவர்ச்சி என்பது ஒரு ஆண் பெண்ணின் அங்கங்களை கண்டு மயங்குதல், ஒரு பெண் ஆணின் உடல் வசிக்கிறத்தில் மயங்குதல் இதுவே இனக்கவர்ச்சி.
காதல் என்பது கண்களால் மலர்வது. காதலில் காமம் முதலில் வெளிப்படுவது இல்லை.
இனக்கரவர்ச்சியில் இரண்டு உடல்கள் மட்டும் இணைகிறது.
ஆனால் காதலோடு;காமம் கலக்கும்போது அது தெய்விகதன்மை அடைகிறது.
காமத்தை தனிக்கவே திருமணம் ஆனால் குழந்தையோடு பலரின் வாழ்க்கையில் காமம் தனிக்கப்படாத தம்பதியினர் ஏராளம்.
காதல் திருமணமே இங்கு தகராறாக மாறும் போதும். பெற்றோர்கள் பார்த்து வைக்கும் திருமணத்தில் யார் என்று கூட புரிந்து கொள்ளமுடியாமல் அவர்கள் உடல் அளவில் இணைக்க படுகிறார்கள்.
கலவி என்பது ஒரு அன்பின் வெளிப்பாடாக இருக்கவேண்டும் அனால் இந்த திருமணத்தில் இரண்டு உடல்களின் தேவைகளை பூர்த்தி செய்யவே கற்றுக்கொடுக்கப்படுகிறது.
வாழும் கலையை ஏத்தனை வீடுகள், பள்ளிகள், கல்லூரிகள் சொல்லித்தருகிறார்கள்.
காதல் தோல்வி என்றால் மனம் உடைந்து தற்கொலை. நம் உடலில் வேதியியல் மாற்றம் தான் காதல் என்று புரிந்து இருந்தால் தனக்கு பிடித்தமானவர்களிடம் காதல் தன்மை எதிர்காலத்தில் பல நபர்களிடம் வரக்கூடும் என்று விழிப்புணர்வு இருந்தால் இத்தகைய செயல்கள் நடைபெறாமல் இருக்கும்;
இங்கு காமம் கொள்ளலாம், கலவியில் ஈடுபடலாம், பிள்ளை பெறலாம் ஆனால் அதை குறித்து பேசுவது மட்டும் தவறான, வெட்கத்துக்குரிய செயல். இது நகைப்புக்கு உரிய செயலாக இருக்கிறது