ஆண்களின் விதைப்பையும் பெண்ணின் வாழ்க்கையும்?
மனிதனின் விதைகள் வயிற்றின் உள் இருபுறங்களின் தோன்றி கரு வளரும் போது கொஞ்ச கொஞ்ச மாக இறங்கி ஒன்பதாவது மாசத்தால் விதைப்பையில் வந்து சேரும் இப்படி இறங்கிவரும் போது ஏதாவது பிரச்சனைகள் ஏற்பட்டால் அந்த இடத்தில் தங்கிவிடும் விதைப்பைக்கு வந்து சேராது.
விதைப்பையில் விசேஷம் என்னவென்றால் அது நமது உடம்பின் வெப்பநிலை (98.6F) யை விட குறைவான வெப்பநிலையில் (93.2 F) விதைகளை வைத்திருக்கும் அப்படி வைத்தால் மட்டுமே விந்து அணுக்கள் உற்பத்தியும், நல்ல வீரியமுள்ள விந்துவும் உற்பத்தியாகும். சூடான இடத்தில் வேலை பார்பவர்களுக்கு Sperm Count கம்மியாக இருக்கும் (ஓட்டுனர்கள், பாய்லர்களில் வேலை, வெப்பமான தொழிற்சாலைகளில்)
ஆண் குழந்தைகள் பிறந்தவுடன் இரண்டு விதைகளும் விதைப்பையில் இருக்கிறதா என்பதை கட்டாயம் பார்கவேண்டும். ஒரு வேளை விதைப்பையில் இல்லை எனில் மருத்துவர்களை அணுகலாம். இப்பே ஆஸ்பத்திரி பிரசவங்கள் அதிகம் அதனால் குழந்தை பிறந்தவுடன் குழந்தைகள் டாக்டர் வந்து பரிசோதிப்பார் அவர் கண்டுபிடிப்பார் இருந்தாலும் பெற்றோர்களும் பார்பது நல்லது.
ஒருவேளை விதைகள் இல்லை என்றால் மருத்துவர்கள் அந்த விதைகளை 6 - 18 மாதங்களுக்கு இடையில் அறுவை சிகிச்சைமுறையில் (orchidopexy) இழுத்து வந்து விதைப்பையில் வைத்துவிடுவார்கள் (லேப்ராஸ்கோப்பியிலே பண்ணிவிடுவார்கள் Minor அப்பரேஷன் தான்)
ஆனால் விதைகளை 2 வருடங்களுக்கு மேல் கவனிக்க தவறினால் அதன்பிறகு சிகிச்சைக்கு பின் உள்ள விந்து உற்பத்தி சந்தேகமே. மேலும் புற்றுநோய் விதைகளை தாக்குவதற்கான வாய்ப்பு மிக அதிகம்.
அறியாமையினால் விதைகள் இறங்காமல் இருப்பதை கவனிக்காமல் கல்யாணம் செய்தோர் அதிகம். அந்த பெண்ணின் வாழ்க்கையும் சேர்ந்து நாசமாகும்!