பெண்ணின் மஞ்சள் குளியல் ஆண்களுக்கு ஏன்?

women-manjal-kuliyal
பெண்ணின் மஞ்சள் குளியல் ஆண்களுக்கு ஏன்?

எப்போதும் சுற்றிக்கொண்டே இருக்கும் ரத்தம், நீர்மம், சக்தி (Blood, Fluid, Qi) இந்த மூன்றும பருவநிலை மாற்றத்தினாலோ, வாழ்க்கை முறை, உணவு மாற்றத்தினாலோ சுற்றுவது குறைந்து ஒரு இடத்தில் தேங்க தொடங்கும்.. ரத்தம் நீர்மம் சக்தி எங்கு தேங்கி இருக்கிறதோ அந்த இடம் பாதிக்கத் தொடங்கும்..

அந்த இடத்தில் கெட்டுப் போன நீர் உற்பத்தியாகும்.. கெட்டுப்போன நீர், சிறுநீர், மலம், மாதவிடாய் வழியாக வெளியேறும் இன்னும் தோலில் உள்ள நுண் துகள்கள் வழியாக வியர்வை மூலம் வெளியேறும்.. அப்போது உடலில் நாற்றம் ஏற்படும்.. மாதவிடாய் மற்றும் கொங்கையில் ஏற்படும் கெட்டுப்போன நிணநீர் தேக்கம் பெண்களுக்கு உடலில் கற்றாழை போன்ற நாற்றத்தை ஏற்படுத்தும்... நல்ல தூக்கம் நல்ல உணவு குனிந்து நிமிர்ந்து உடற்பயிற்சி செய்யும் போது பெண்களுக்கு தேக்கமில்லாமல் நீர் வெளியேறி உடலில் நாற்றம் குறையும்..

இதனால் தான் பெண்கள் உடலில், முகத்தில் மஞ்சள் தேய்த்து குளிப்பது நம் மரபு பழக்கமாக இருந்தது..

மஞ்சள் குளியல் அன்று முழுவதும் பெண்ணின் உடல் வாசனையாக இருக்கும்.. உடலில் உருவான துர்நீரை தோலில் வழியாக வெளியேற்றாமல் சோப்பு தடுக்கிறது.. ஆனால் மஞ்சள் துர்நீரை அகற்றி உடலை சுத்தப்படுத்துகிறது.

பெண்கள் தொடர்ந்து மஞ்சள் பூசி குளிக்கும் போது அவர்கள் முகத்தில் தேவையற்ற ரோமங்கள் வளர்வது தடைபடுகிறது.. அவர்களின் தோல் வழுவழுப்பாய் இருக்கும்.. அக்குள் மற்றும் அந்த இடங்களில் அவர்களுக்கு மஞ்சள் வாசனை எப்போதும் இருந்து கொண்டே இருக்கும்..

இதைதான் "பொன்னிறமாம் மேனி புலானாற்றமும் போகும்". என்று செய்யுளில் வருகிறது.. அடுத்த வரியை கவனியுங்கள் "மன்னு புருஷ வசியமாம்"அதாவது பெண்ணின் இந்த மஞ்சள் வாசனையை நுகரும் கணவன் பெண்ணின் நினைவுடனே எப்போதும் இருப்பான்..

தினம் தினம் மஞ்சள் தேய்த்து தேய்த்து குளித்த பெண்ணிடம் சங்கமம் செய்யும் நேரத்தில் அவளின் தோலின் அருகில் ஆண் ஆழ்ந்து சுவாசிக்கும் போது சுவாச காற்றின் மூலம் ஆணின் ரத்தத்தில் மஞ்சள் வாசனை சேருகிறது.. மஞ்சள் ரத்தத்தை சுத்தம் செய்யக்கூடியது.. ரத்தம் அசுத்தமாக இருந்தால் ஆணின் சுக்கிலம் குறைவாக சுரக்கும்... மேலே சொன்ன நிகழ்வில் ரத்தம் சுத்தமாகிறது சுக்கிலமும் போதுமான அளவு சுரக்கிறது.. ஆணின் காதல்நீரும் வற்றாமல் பெண்ணிடமே வசிய பட்டு கிடக்க பெண்ணின் மஞ்சள் குளியல் எப்படி எல்லாம் பயன்படுகிறது என பாருங்கள்...அதனால் ஆண் தன் மனைவியின் மீதே எப்போதும் அன்புடனும், ஈர்ப்புடனும் இருப்பான்.