மதுரை அயிரை மீன் குழம்பு வைப்பது எப்படி?
தேவையான பொருள்கள்
அயிரை மீன் - 250 கிராம்
அரைக்க தேவையான பொருள்கள்
தேங்காய் - 1 கைப்பிடி
சீரகம் - 1ஸ்பூன்
பூண்டு - 1பல்
தாளிக்க
நல்லெண்ணெய் - 1 குழி கரண்டி அளவு
கடுகு - 1 ஸ்பூன்
வெந்தயம் - 1/2 ஸ்பூன்
சின்ன வெங்காயம் - - 200 கிராம்
பூண்டு - 10 பல்
மல்லி தூள் - 3 ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 1/2 ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/2 ஸ்பூன்
தக்காளி - 2
புளி - 10 கிராம்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
அயிரை மீனை நன்கு கழுவி கொள்ளவும் .
கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு,வெந்தயம் போட்டு த் தாளித்து அதோடு சின்ன வெங்காயம் ,பூண்டு போட்டு நன்கு வதக்கி அனைத்து மசாலா தூள் போட்டு பச்சை வாசனை போக வதக்கி அதோடு தக்காளியும் சேர்த்து வதக்கி புளியை கரைத்து ஊற்றி அரைத்த மசாலா போட்டு குழம்புக்கு தேவையான அளவு தண்ணீர் , ஊற்றி உப்பு போட்டு கொதிக்க வைத்து குழம்பு கெட்டியானவுடன் அயிரை மீனை போட்டு அடூப்பை 10 நிமிடம் சிம்மில் வைத்து இறக்கினால் சுவையான அயிரை மீன் குழம்பு ரெடி .