தேவையானவை:
சுறாமீன் - அரை கிலோ (தோல் உரித்தது)
சின்ன வெங்காயம் நறுக்கியது) 150 கிராம் (பொடியாக
மல்லித் தூள் - 3 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
பூண்டு - 100 கிராம் (பொடித்தது)
புளி - 100 கிராம்
உப்பு - தேவையான அளவு
நாட்டுத் தக்காளி நறுக்கியது) 150 கிராம் (பொடியாக
சோம்பு - அரை டீஸ்பூன்
சீரகம் -20 கிராம்
மிளகு - 50 கிராம்
செய்முறை:
ஒரு கடாயில் சீரகம், மிளகு இரண்டையும் தனித்தனியாக வறுத்து மிக்ஸ்சியில் பொடிச் செய்துக் கொள்ளவும். புளியை கரைத்து பாதி உப்பு, மல்லித்தூள், மஞ்சள் தூள் சேர்த்து கலக்கி வைக்கவும்.
அதே கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, சீரகம், வெந்தயம் தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம், பூண்டு, தக்காளி, சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்.வதங்கிய பிறகு புளி தண்ணீரை ஊற்றி, தனியாதூள், மஞ்சள் தூள் போட்டுக் கொதிக்க வைக்கவும்.
மசாலாவின் பச்சை வாசனை போன பிறகு, வறுத்து பொடி செய்ததை போட்டு நன்றாக கலக்கி மீனைப்போட்டு மூடிவிடவும். மீன் நன்றாக வெந்த பிறகு கொத்தமல்லித் தழை, கறிவேப்பிலை போட்டு இறக்கவும்.