தேவையானவை:
மட்டன் (அ) சிக்கன் - முக்கால் கிலோ
சேமியா - 600 கிராம்
இஞ்சி-பூண்டு விழுது - 2 டேபிள்ஸ்பூன்
பெரியவெங்காயம் - 5 (நீளமாக நறுக்கியது)
தக்காளி - 4 (பெரியது நறுக்கியது)
கொத்தமல்லித்தழை - 4 டேபிள்ஸ்பூன் (நறுக்கியது)
புதினா இலை - 3 டேபிள்ஸ்பூன்
பச்சைமிளகாய் - 6
தயிர் - ஒரு கப்
சின்னவெங்காயம் - ஒரு கைப்பிடி
பட்டை - 5 பூண்டு
கிராம்பு - 4
ஏலக்காய் - 4
நெய் - ஒன்றே கால் கப் - 4 டேபிள்ஸ்பூன்
மிளகாய்த்தூள் - ஒன்றரை டேபிள்ஸ்பூன்
எலுமிச்சைப்பழம் - அரை பழம் (சாறு எடுக்கவும்)
தண்ணீர் - 600 மில்லி (கிரேவியுடன் சேர்த்து)
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
அடுப்பில் வாணலியை வைத்து 4 டேபிள்ஸ்பூன் நெய் விட்டு சூடாக்கி சேமியாவை சேர்த்து பொன்னிறம் வரும் வரை நன்றாக வறுத்து எடுக்கவும். அகலமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து, நெய் விட்டு சூடாக்கவும்.
பிறகு பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து வெடிக்க விடவும். பெரியவெங்காயம் சேர்த்து 8 நிமிடங்கள் சிவக்கும் வரை வதக்கவும். இத்துடன் தட்டிய சின்னவெங்காயம், கீறிய பச்சைமிளகாய், இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
பிறகு தக்காளி சேர்த்து கரைய வதக்கி, புதினா, கொத்தமல்லித்தழை, தயிர், உப்பு, மட்டன்/சிக்கன் மற்றும் மிளகாய்த்தூள் சேர்த்து எண்ணெய் பிரியும்வரை வதக்கவும். கறியில் இருந்து வெளிப்படும் தண்ணீர், தயிர் மற்றும் தக்காளியில் இருந்து வரும் தண்ணீர் என கிரேவியில் இருந்து வெளிப்படும் தண்ணீரையும் கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டும்.
இதையும் சேர்த்து நாம் ஊற்றும் தண்ணீர் ஒட்டு மொத்தமாக 600 மில்லி வரும் அளவு இருக்க வேண்டும். அதற்கேற்ப தண்ணீர் ஊற்றி கறியை நன்கு வேகவிடவும். இனி, கிரேவியில் எலுமிச்சைச்சாறு, வறுத்த சேமியாவை சேர்த்துக் கிளறி விட்டு 5 லிருந்து 8 நிமிடங்கள் குறைந்த தீயில் மூடி போட்டு வேகவிட்டு எடுத்தால் சேமியா பிரியாணி ரெடி. தயிர் சட்னியுடன் பரிமாறவும்.