சுவையான பிரியாணியில் பல வகையுண்டு, சைவ மட்டன் பிரியாணி சோயா துண்டுகளால் தயாரிக்க படுகிறது. சோயா உயர் புரத மற்றும் பல வகை உணவுகள் சைவ மற்றும்அசைவ மாற்றாக பயன்படுத்தப்படுகிறது.
தேவையானவை:
சோயா- 1/2 கோப்பை,ஊறவைத்து சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
பெரிய வெங்காயம் – 1
தக்காளி -2
பச்சை மிளகாய்-2
இஞ்சி பூண்டு விழுது- 2 தேக்கரண்டி
கறி வேப்பிலை-1 கொத்து
மிளகாய்த்தூள்-1/2 தேக்கரண்டி
கரம் மசாலா தூள்-1/2 தேக்கரண்டி
உப்பு-1 தேக்கரண்டி
மஞ்சள் தூள்-1/4 தேக்கரண்டி
எண்ணெய்- 3 மேஜைக்கரண்டி
நெய்-1 மேஜைக்கரண்டி
பாசுமதி அரிசி-2 கோப்பை
தேங்காய்ப்பால் அல்லது தயிர்-1/2 கோப்பை
தாளிக்க:
முந்திரி-5 ,7
பட்டை-1 அங்குலம் -2
கிராம்பு-2
பிரியாணியிலை-3 அங்குலம்
ஏலக்காய்-2
கல்பாசிப்பூ-1
ஜாதிப்பத்திரி-1 அங்குலம்
மிளகு-1/4 தேக்கரண்டி
அரைக்க:
புதினா,மல்லி இலை 1/2 கோப்பை
சோம்பு-1 தேக்கரண்டி
சீரகம் -1தேக்கரண்டி
பச்சை மிளகாய்-3
செய்முறை:
அரிசியை நன்கு கழுவி 15 நிமிடம் ஊற வைக்கவும்.
கடாயில் எண்ணெய் காய்ந்ததும் தாளிதம் செய்யவும்.
இஞ்சி பூண்டு விழுது, நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
பின்னர், தக்காளி, பச்சை மிளகாய், மற்றும் ஊறவைத்து நறுக்கிய சோயா சேர்த்து வதக்கவும்.
நன்கு வதங்கிய பின்னர்,அரைத்த விழுது சேர்த்து வதக்கவும்.
தயிர், உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், தண்ணீர் 2 கோப்பை மற்றும் ஊறவைத்த அரிசி, சேர்த்து கலந்து, கொதித்ததும் குக்கரில் 2 விசில் வைத்து எடுக்கவும்.
மல்லி இல்லை தூவி, முந்திரி நெய்யில் வறுத்து அதையும் தூவி பரிமாறவும்.
தேவைப்பட்டால் எலுமிச்சை சாறு சேர்த்துக்கொள்ளலாம்.
சுவையான .சைவ மட்டன் பிரியாணி ரெடி.