தேவையானவை:
1/2 கிலோ குடல்
2 பெரிய வெங்காயம்
3 தக்காளி
2 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
1 டீஸ்பூன் சோம்பு
1/4 டீஸ்பூன் கரம் மசாலா
1 பட்டை
2 கிராம்பு
1 டீஸ்பூன் டேபிள் ஸ்பூன் குழம்பு மிளகாய்த்தூள்
1/2 கப் தேங்காய்துருவல் ▢கொத்தமல்லி இலைகள் சிறிதளவு
உப்பு தேவையான அளவு ▢எண்ணெய் தேவையான அளவு
செய்முறை :
குடலை நன்கு கழுவி சுத்தம் செய்து ஒரு குக்கரில் சேர்த்து அதனுடன் சோம்பு ஒரு டேபிள் ஸ்பூன் இஞ்சிபூண்டு விழுது மஞ்சள் தூள் உப்பு சேர்த்து 10 விசில் விட்டு எடுத்துக் கொள்ளவும்
ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவல் சேர்த்து நன்கு அரைத்து விழுதாக எடுத்துக் கொள்ளவும்
குக்கரில் எண்ணெய் ஊற்றி பட்டை கிராம்பு ஏலக்காய் சேர்த்து தாளித்து அதனுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கிக் கொள்ளவும்
பிறகு அதில் பெரிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கி அதன்பிறகு தக்காளியையும் சேர்த்து நன்கு வதக்கிகொள்ளவும்
குழம்பு மிளகாய் தூள் சேர்த்து நன்கு கலந்து பிறகு வேக வைத்துள்ள குடலை சேர்த்து தேங்காய் விழுதையும் சேர்த்து சிறிதளவு கரம் மசாலா சேர்த்து நன்கு கலந்து மூன்று விசில் விட்டு எடுக்கவும்
இறுதியாக கொத்தமல்லி இலைகள் சேர்த்து இறக்கினால் சுவையான குடல் குழம்பு தயார்...