தேவையானவை:
1 கப் கோதுமை மாவு
1 கப் மிளகாய்த் தூள்
3/4 ஸ்பூன் மல்லித் தூள்
1 ஸ்பூன் தக்காளி சாஸ்
எண்ணெய் தேவையான அளவு
உப்பு தேவையான அளவு
1/2 ஸ்பூன் தேவையான மசாலா
1/2 ஸ்பூன் மஞ்சள் தூள்
1 வெங்காயம்
1 தக்காளி
1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
செய்முறை
முதலில் ஒரு சிறிய பவுளில் கரம்மசாலா, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், தக்காளி சாஸ், உப்பு ஆகியவற்றை சேர்த்து கலந்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, உப்பு மற்றும் சிறிதளவு எண்ணெய் விட்டு சப்பாத்திக்கு மாவு பிசைவது போல் தண்ணீர் சிறிதளவு விட்டு பிசைந்து கொள்ளவும்.
சப்பாத்தி மாவை எடுத்து இரண்டு பகுதிகளாக பிரித்து ஒன்றை சப்பாத்தி தேய்ப்பது போல் தடிமனாக தேய்த்துக் கொள்ளவும்.
பின்பு சதுரமாக வெட்டிக் கொள்ளவும். முன் பகுதியும் பின் பகுதியையும் இணைத்து பாஸ்தா போல் செய்து கொள்ளவும்.
ஒரு கடாயில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சிறிதளவு மஞ்சள் தூள் மற்றும் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு கோதுமை பாஸ்தாவை அதில் ஒன்று ஒன்றாக சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்.
நன்றாக வெந்தவுடன் தண்ணீர் வடித்து எடுத்து ஆற வைத்துக் கொள்ளவும்.
பின் மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து காய்ந்ததும் எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, தக்காளி ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்.
பின்பு நாம் கலந்து வைத்த மசாலாவை சேர்த்துசிறிதளவு தண்ணீர் ஊற்றி மசால்வடை போகும் வரை நன்றாக கிளறிக் கொள்ளவும்.
மசால் வடை போனவுடன் தயார் பண்ண பாஸ்தாவை அதில் சேர்த்து நன்றாக கிளறிக் கொள்ளவும். இரண்டு நிமிடம் அப்படியே விட்டு வேக விடவும்.
அவ்வளவுதான் சுவையான கோதுமை பாஸ்தா தயார்.