தேவையானவை ;
அரிசி - 1 கப்
பால் - 4 கப்
சர்க்கரை - 2 கப்
முந்திரி - 12
ஏலக்காய் பொடி - 1 தேக்கரண்டி
நெய் - 2 மேஜைக் கரண்டி
செய்முறை
ஒரு வாணலியில் நெய் விட்டு, அதில் அரிசியைப் போட்டு பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.
பின்ன் அந்த அரிசியை நன்கு கழுவி, ஒரு பாத்திரத்தில் போட்டு, ஒரு கப் அரிசிக்கு, ஒரு கப் பால், ஒரு கப் தண்ணீர் என்ற விகிதத்தில் சேர்த்து வேக விடவும்.
கால், தண்ணீர் கலவையில் அரிசி நன்கு வெந்து குழைய வேண்டும். அரிசி குழைந்ததும் மீதமிருக்கும் பாலை ஊற்றி அடிபிடிக்காமல் கிளற வேண்டும்.
பால் சுண்டி வரும்போது தீயை மிதமாக வைத்துவிட்டு சர்க்கரை சேர்க்கவும். சர்க்கரை நன்கு கரைந்து பாயாசம் பதம் வரும்போது ஏலக்காய் பொடி, நெய்யில் வறுத்த முந்திரி ஆகியவற்றைப் போட்டு கிளறவும்.
அரிசிப் பாயசம் தயார்.