Breaking News :

Saturday, March 15
.

கோதுமை ரவா பாயசம் செய்வது எப்படி?


தேவையானவை:

கோதுமை ரவா – 1/4 கப்
வெல்லம் – 1/2 கப்
பால் – 1 கப்
உப்பு – 1 சிட்டிகை
நெய் – 1 தேக்கரண்டி
முந்திரிப்பருப்பு – 6
ஏலக்காய் – 1

செய்முறை
முதலில் ஒரு சிறிய குக்கரில் நெய் சேர்த்து, முந்திரிப்பருப்பை பொன்னிறமாக வறுத்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.

அதே குக்கரில் கோதுமை ரவையை சேர்த்து ஒரு நிமிடம் குறைந்த தீயில் வறுக்கவும்.
கப் - 1& 1/4 கப் தண்ணீர், உப்பு சேர்த்து 3-4 விசில் மிதமான தீயில் வேக வைக்கவும்.

மிருதுவாக வெந்தவுடன், வெல்லத்தை 1/4 கப் தண்ணீர் சேர்த்து சூடு செய்து கரைக்கவும். வெந்த கோதுமை ரவையுடன் வடிகட்டி சேர்த்து கலக்கவும். 1/2 கப் மேலும் தண்ணீர் சேர்க்கவும்.

குறைந்த தீயில் 5 நிமிடம் பாகு சுண்டும் வரை கொதிக்க விடவும்.

பாலை, மெதுவாக சேர்த்து கலக்கவும். ஏலக்காய், வறுத்த முந்திரி சேர்த்து 2 நிமிடம் சூடு செய்யவும். அடிபிடிக்காமல் கலந்து கொண்டே இருக்கவும். ஆரிய பிறகு கெட்டியாகும் அதனால் அதற்கு தகுந்தவாறு அடுப்பை நிறுத்தவும்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.