தேவையானவை:
பிரட் - ஒரு பேக்கட்
முட்டை - நான்கு
பால் - அரை டம்ளர்
சர்க்கரை - நான்கு தேக்கரண்டி
தூள் உப்பு - சிறிதளவு
மஞ்சள் பொடி - தேவையான அளவு
மிளகாய் பொடி - தேவையான அளவு
எண்ணெய் - சிறிதளவு
செய்முறை:
ஒரு கிண்ணத்தில் உப்பு, மஞ்சள் பொடி, மிளகாய் பொடி, சர்க்கரையைப் போட்டு சிறிது தண்ணீர் விட்டு நன்கு கரைத்துக் கொள்ளுங்கள்.
காய்ச்சிய பாலில் முட்டைகளை உடைத்து உற்றி விடுங்கள். பின்பு அதில் மேற்கூறிய கலவையைப் சேர்த்து நன்கு அடித்துக் கலக்குங்கள்.
தவாவில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், அடித்து வைத்திருக்கும் முட்டைக் கலவையில் ஒரு துண்டு பிரட்டை முக்கி எடுத்து தவாவில் போடவும்.
அதனைச் சுற்றி எண்ணெய் விடவும். ஒரு பக்கம் வெந்ததும் திருப்பி போடவும். பொன்னிறமாக வந்ததும் எடுத்துவிட்டவும்.
அடுத்தடுத்து அனைத்து பிரட்டுகளையும் இவ்வாறே முக்கி தவாவில் போட்டு எடுக்கவும்.
சுவையான முட்டை பிரட் ரோஸ்ட் ரெடி.
இது சிறந்த காலை மற்றும் மாலை உணவாகும். உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் ஒரே சமயத்தில், பால், முட்டை, பிரட் என மூன்று ஊட்டச்சத்துப் பொருட்களை அளித்துவிட்டீர்கள் என்று உங்களுக்கு நீங்களே சபாஷ் போட்டுக் கொள்ளலாம்.