தேவையானவை:
மீன் – ½ கிலோ (வஞ்சரம், சங்கரா, நெய்மீன் )
வெங்காயம் 2 (நறுக்கியது)
தக்காளி 2 (நறுக்கியது)
பூண்டு 10 பல்
மிளகாய்த்தூள் – 1½ டீஸ்பூன்
மஞ்சள்தூள் – ½ டீஸ்பூன்
தனியாத்தூள் – 1 டீஸ்பூன்
மிளகாய் – 2டீஸ்பூன்
கறிவேப்பிலை
மஞ்சள்
உப்பு தேவையான அளவு
சோம்பு
கொத்தமல்லி இலை
எண்ணெய்
புளி சிறிய எலுமிச்சை அளவு (1 கிளாஸ் தண்ணீரில் கரைத்தது)
செய்முறை
மீனை நன்றாக கழுவி, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து 10 நிமிடம் ஊறவைக்கவும்
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கறிவேப்பிலை, சோம்பு வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் மையலாகும் வரை வதக்கி, பூண்டு தக்காளி சேர்த்து நன்கு மசியும் வரை வதக்கவும்.
மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள் சேர்த்து நன்கு கிளறவும்.
புளி நீர் சேர்த்து கொதிக்க விடவும்.
மீனைச் சேர்த்து கொதிக்க விடவும்.
குழம்பு கொதிக்க தொடங்கும்போது மீனை மெதுவாக சேர்த்து, 5–10 நிமிடம் மிதமான தீயில் மூடி வைத்து வேகவைக்கவும்
மீன் நன்றாக வெந்ததும் கொத்தமல்லி இலை தூவி அடுப்பை அணைத்து, 10 நிமிடம் மேல் மூடி வைத்து வாசனை ஊற வைக்கவும் அல்லது ஒரு நாள் கழித்து பரிமாறலாம் மீன் குழம்பு இன்னும் சுவையாக இருக்கும்.