தேவையானவை:
பச்சரிசி – 400 கிராம்
ஏலக்காய் – 5 எண்ணம்
சுக்கு – சுண்டு விரல் அளவு
மண்டை வெல்லம் – 300 கிராம்
எண்ணெய் – பொரித்தெடுக்க தேவையான அளவு
செய்முறை
அரிசியை 1 – 1½ மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும். பின்னர் தண்ணீரை நன்கு வடித்து விடவும்.
பின் அரிசியை உலர்ந்த துணியில், நிழலில் காய வைக்கவும்.
முக்கால் பாகம் காய்ந்தவுடன் மிசினில் இடித்துக் கொள்ளவும்.
இடித்த மாவை சலித்துக் கொள்ளவும்.
வெல்லத்தை சிறு துண்டுகளாக்கிக் கொள்ளவும்.
ஏலக்காய், சுக்கு ஆகியவற்றை தண்ணீர் சேர்க்காமல் மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
பின் ஏலக்காய், சுக்கு கலவையை இடித்த மாவுடன் சேர்க்கவும்.
மாவுடன் பொடித்த ஏலக்காய், சுக்கு கலவையை சேர்த்தவுடன்
மாவுடன் பொடித்த ஏலக்காய், சுக்கு கலவையை சேர்த்தவுடன்
துண்டுகளாக்கிய வெல்லத்தை அடிகனமான பாத்திரத்தில் 25 கிராம் (1/8 டம்ளர்) தண்ணீர் விட்டு காய்ச்சவும்.
வெல்லத்தை பாகு காய்ச்ச வைத்தவுடன்
வெல்லம் முழுவதும் கரைந்ததும், அடுப்பை சிம்மில் வைத்து மெல்லிய தீயில் கம்பி பதம் வரும் வரை காய்ச்சவும்.
(வெல்லப் பாகை சிறிது எடுத்து விரல்களுக்கு இடையே வைத்து விரல்களை மேலும் கீழும் அசைக்கும் போது கம்பி போல் வரும்).
தயார் நிலையில் வெல்லப்பாகு
பின் வெல்லப் பாகை வடிகட்டி சிறிது சிறிதாக அரிசிமாவில் சேர்த்து கட்டி விழாதவாறு கிளறவும்...
அதிரச மாவானது சப்பாத்தி மாவு பதத்திற்கு வரும்.
தயார் நிலையில் அதிரச மாவு
அடிகனமான பாத்திரத்தில் எண்ணெயை (பொரித்து எடுப்பதற்கு ஏற்ப) காய வைத்து அதிரச மாவை வடை மாதிரி தட்டி எண்ணெயில் போடவும்.
வடை வடிவில் தட்டப்பட்ட அதிரசம்
அதிரசம் எண்ணையில் போட்டதும்
ஒருபுறம் வெந்ததும் அதிரசத்தை மறுபுறம் திருப்பி விடவும்.
அதிரசத்தை திருப்பிப் போட்டதும்
அதிரசமானது நிறம் மாறியவுடன் எடுத்து விடவும்.
சுவையான அதிரசம் தயார்.....