தேவையான பொருட்கள்::
2 கப் பச்சரிசி 1/2 கப் பாசிப்பருப்பு 4 கப் வெல்லம் 1 1/2 லி பால் 1/2 கப் நெய் 1 டீஸ்பூன் குங்குமப் பூ 1/2 கப் முந்திரி, திராட்சை 1 குங்குமப் ஏலக்காய் தூள் 1 சிட்டிகை பச்சை கற்பூரம்
செய்முறை
முதலில் அரிசி மற்றும் பாசிப்பருப்பை நன்கு கழுவி சிறிதளவு தண்ணீர் விட்டு ஊற வைத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அரிசி மற்றும் பாசிப்பருப்பில் உள்ள தண்ணீரை நன்கு வடித்து விட்டு சேர்த்து சிறிது வறுத்து தனியாக எடுத்துக் கொள்ளவும்.
பின் தண்ணீர் மற்றும் பால் சேர்த்து கொதித்ததும் வறுத்து வைத்துள்ள அரிசி, பருப்பை சேர்த்து வேக வைக்கவும்.
அரிசி, பருப்பு நன்கு வெந்ததும், அத்துடன் காய்ச்சாத பால், வெல்லம் சேர்த்து நன்கு கலந்து மிதமான சூட்டில் வேக வைக்கவும்.
பின்னர் குங்குமப்பூ, ஏலக்காய் தூள், பச்சை கற்பூரம் சேர்த்து நன்கு கலந்து சிறிது நேரம் வேக விடவும்.
பின் மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து நெய் சேர்த்து சூடானதும் முந்திரி, திராட்சை சேர்த்து வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
அதன்பிறகு வறுத்த முந்திரி, திராட்சையை அக்காரவடிசலில் சேர்த்து நன்கு கலந்து இறக்கினால் சுவையான, சத்தான அக்காரவடிசல் தயார்.