தேவையானவை:
1 கப் பெரிய வெங்காயம்
1/2 கி சிக்கன்
1 டீஸ்பூன் குறுமிளகு
1 டீஸ்பூன் சீரகம்
1 டீஸ்பூன் மல்லி
1/2 டீஸ்பூன் சோம்பு
2 கிராம்பு
1 துண்டு பட்டை
2 ஏலக்காய்
7 சோம்பு
2 மிளகாய்
4 காஷ்மீர் மிளகாய்
1/2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் ▢கறிவேப்பில்லை, கொத்தமல்லி சிறிதளவு
செய்முறை
முதலில் சிக்கனை நன்கு கழுவி சுத்தம் செய்து துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். பின் சிக்கனுடன் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், உப்பு, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கலந்து கொள்ளவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து சீரகம், குறுமிளகு, பட்டை, மல்லி, சோம்பு, வரமிளகாய், பட்டை, கிராம்பு, ஏலக்காய், காஷ்மீர் மிளகாய் சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
இவை ஆறியதும் இதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சேர்த்து நறுக்கிய பெரிய வெங்காயம் மற்றும் கறிவேப்பில்லை சேர்த்து நன்கு வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் ஊற வைத்த சிக்கன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். சிறிதளவு தண்ணீர் விட்டு மூடி வைத்து கொதிக்க விடவும்.
சிக்கன் நன்கு வெந்ததும் நாம் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து கலந்து இரண்டு நிமிடங்கள் மூடி வைத்து வேக விடவும். பின் கொத்தமல்லி தழை தூவி அடுப்பை அணைத்து விடவும்.
அவ்வளவுதான் சுவையான மற்றும் காரசாரமான ஆந்திரா ஸ்டைல் சிக்கன் வறுவல் தயார். இது சாதம், சப்பாத்தி, தோசை ஆகியவற்றிற்கு சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
இலவச வரன் பதிவுக்கு கணேசன் மேட்ரிமோனி (ganesanmatrimony.com) பார்க்கவும்