பம்பாய் சட்னி செய்வது எப்படி?
தேவையானவை:
300 கிராம் உருளைக்கிழங்கு
300 கிராம் -பல்லாரி
1 அங்குலம் -இஞ்சி
3 -பல் பூண்டு
5 -மிளகாய்
செய்முறை :
2 தேக்கரண்டி - கறிவேப்பிலை
1 தேக்கரண்டி -கடுகு
1 தேக்கரண்டி உளுந்தம்பருப்பு.
1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் உப்பு, மஞ்சள், கடலைமாவு சிறிதளவு
கடலைமாவை 2 கப் தண்ணீரில் கரைத்து. அந்தக் கரைசலில் வெட்டிய உருளை, வெங்காயம் இவற்றைப் போடவம். மஞ்சள், உப்பு சேர்க்கவும். தாளிக்கும் பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு. போட்டு பொரிந்தவுடன் உளுந்தம்பருப்பை போட்டு சிவந்தவுடன் இஞ்சி; • பூண்டு, மிளகாய், கறிவேப்பிலை போட்டு வதங்கியவுடன் உருளைக்கிழங்கு, வெங்காயம் போட்டு வேகும் வரை வைத்திருக்கவும்.
சாறு சற்று அதிகம் இருக்கும். புளிப்பு வேண்டுமாயின் ஒரு நறுக்கிய தக்காளிப்பழம் அல்லது அரை எலுமிச்சம்பழம் சேர்க்கலாம்.