மாவிளக்கு செய்வது எப்படி?
1. பாரம்பரிய மாவிளக்கு
தேவையான பொருட்கள்:
பச்சரிசி – 1 கப்
வெல்லம் – ¾ கப்
ஏலக்காய் பொடி – ½ டீஸ்பூன்
நெய் – தேவைக்கு
செய்வது எப்படி:
1. பச்சரிசியை 2 மணி நேரம் ஊறவைத்து, வடிகட்டி நிழலில் காயவைத்து அரிசி மாவாக அரைக்கவும்.
2. அரிசி மாவில் வெல்லம் துருவல், ஏலக்காய் பொடி சேர்த்து கலக்கவும்.
3. சிறிதளவு நெய் சேர்த்து பிசைந்து மாவை ஒன்றிணைக்கவும்.
4. மாவை ஒரு தட்டில் வைத்து விளக்கு வடிவில் நடுவில் குழி செய்து கொள்ளவும்.
5. அந்த குழியில் நெய் ஊற்றி, திரி வைத்து ஏற்றி வழிபாடு செய்யவும்.
2. பால் மாவிளக்கு
தேவையான பொருட்கள்:
பச்சரிசி மாவு – 1 கப்
பால் – ½ கப்
வெல்லம் – ¾ கப்
நெய் – 3 டீஸ்பூன்
செய்வது எப்படி:
1. அரிசி மாவில் வெல்லம் சேர்த்து நன்றாக கலக்கவும்.
2. பால் சிறிது சிறிதாக சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
3. நெய் சேர்த்து பிசைந்து விளக்கு வடிவில் ஆக்கி நடுவில் குழி செய்யவும்.
4. அதில் நெய் ஊற்றி விளக்கேற்றி வழிபாடு செய்யலாம்.
3. சர்க்கரை மாவிளக்கு
தேவையான பொருட்கள்:
பச்சரிசி மாவு – 1 கப்
சக்கரை – ½ கப்
ஏலக்காய் பொடி – ½ டீஸ்பூன்
நெய் – தேவைக்கு
செய்வது எப்படி:
1. அரிசி மாவில் சக்கரை, ஏலக்காய் பொடி சேர்த்து கலக்கவும்.
2. தேவையான அளவு நெய் சேர்த்து மாவை பிசைந்து கொள்ளவும்.
3. விளக்கு வடிவில் செய்து, நடுவில் குழி செய்து, நெய் ஊற்றி ஏற்றலாம்.
4. தேங்காய் மாவிளக்கு
தேவையான பொருட்கள்:
பச்சரிசி மாவு – 1 கப்
வெல்லம் – ¾ கப்
தேங்காய் துருவல் – ¼ கப்
நெய் – தேவைக்கு
செய்வது எப்படி:
1. அரிசி மாவு, வெல்லம், தேங்காய் துருவலை சேர்த்து கலக்கவும்.
2. சிறிதளவு நெய் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
3. விளக்கு வடிவில் செய்து நடுவில் குழி போட்டு நெய் ஊற்றி ஏற்றலாம்.
5. குங்குமப்பூ மாவிளக்கு
தேவையான பொருட்கள்:
பச்சரிசி மாவு – 1 கப்
வெல்லம் – ¾ கப்
குங்குமப்பூ – 3 நூல் (சூடான பாலில் ஊறவைத்தது)
ஏலக்காய் பொடி – ½ டீஸ்பூன்
நெய் – தேவைக்கு
செய்வது எப்படி:
1. அரிசி மாவில் வெல்லம், ஏலக்காய் பொடி சேர்த்து கலக்கவும்.
2. குங்குமப்பால் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
3. மாவை விளக்கு வடிவில் செய்து, நெய் ஊற்றி ஏற்றி வழிபாடு செய்யலாம்.