பெண்களுக்கு தேவைப்படும் வாழைப்பூ கஷாயம் செய்வது எப்படி?

vazhai-poo-kasayam-health-tips
பெண்களுக்கு தேவைப்படும் வாழைப்பூ கஷாயம் செய்வது எப்படி?

வாழைப்பூ (இரண்டு அல்லது மூன்று இதழ்களை நீக்கி விட்டு பூவை சிறிது சிறிதாக நறுக்கி வைத்துக் கொண்டு அதனுடன்
இஞ்சி -5 கிராம், பூண்டு பல் - 5
நல்ல மிளகு - 1 ஸ்பூன், சீரகம் - 1 ஸ்பூன்
சோம்பு-1 ஸ்பூன், கொத்தமல்லி விதை - 1 ஸ்பூன்,

கறிவேப்பிலை 5 இணுக்கு எடுத்து இடித்து கஷாயம் செய்து காலை, மாலை என இருவேளையும் மாதவிலக்கு தோன்றும் காலத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பும் மாதவிலக்கு காலங்களிலும், மாதவிலக்கு முடிந்து இரண்டு நாட்கள் என 3 அல்லது 4 மாதங்கள் அருந்தி வந்தால் கருப்பைப்புண் கர்ப்பப்பைக் கட்டி, வெள்ளைபடுதல், மாதவிலக்கு சீரற்ற தன்மை போன்றவை மாறும். இது கை கண்ட மருந்தாகும். அடிவயிறு கனம் குறையும். புண்புரை நீங்கும் சீராக இரத்த ஓட்டம் பெறும். உடல் வலுவடையும்.