சத்துமாவு செய்வது எப்படி?
தேவையானவை:
கம்பு – 100 கிராம்
ராகி – 100 கிராம்
கோதுமை – 100 கிராம்
பச்சஅரிசி – 100 கிராம்
உளுந்து – 100 கிராம்
பாசிப்பயறு – 100 கிராம்
கொள்ளு – 100 கிராம்
வேர்க்கடலை – 100 கிராம்
முந்திரி – 100 கிராம்
பாதாம் – 100 கிராம்
ஏலக்காய் – 100 கிராம்
ஜவ்வரிசி – 100 கிராம்
மக்காச் சோளம் – 100 கிராம்
கொண்டக்கடலை – 100 கிராம்
பொட்டுக்கடலை – 100 கிராம்
செய்முறை
மேலே கூரிய அனைத்துப் பொருட்களையும் தனித்தனியாக ஒரு வாணலியில் நன்கு வறுக்கவும்.
வறுத்தவுடன் அனைத்தையும் ஒன்று சேர்த்து மிக்சியில் (அ) மாவு அரைக்கும் இடத்தில் கொடுத்து அரைத்துக்கொள்ளவும்.
மாவு ஆறிய உடன் மாவு சலிப்பானில் நன்கு சலித்து கொள்ளவும்.
பிறகு ஒரு பாட்டிலில் கொட்டி வைத்தால் வேவைப்படும் போது பாலில் காய்ச்சி அருந்தலாம்.
சத்துபானம் தயாரிக்கும் முறை
தேவையான பொருட்கள்
சத்துமாவு – 2 ஸ்பூன்
பால் – 2 டம்ளர்
தண்ணீர் – 2 டம்ளர்
சர்க்கரை – தேவைக்கு
செய்முறை
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சத்துமாவையும் சேர்த்து கட்டி படாமல் நன்கு கரைக்கவும்.
கரைத்த இந்த கலவையை அடுப்பில் வைத்து கட்டியாகாமல் நன்கு கலக்கவும்.
சிறிது நேரத்தில் பாலை ஊற்றி நன்கு கலக்கி அதனுடன் சர்க்கரையையும் சேர்த்து கலக்கி இறக்கவும்.
அவ்வளவு தான் சுவையான + ஆரோக்கியமான சத்துமாவு மானம் தயார்
குறிப்பு
வயதானவர்களுக்கு சர்க்கரை சேர்க்காமல் குடுக்கவும்.
சத்துபானம் திக்கா இல்லாமல் கொஞ்சம் தண்ணியா இருக்கட்டும்.
அதிகம் சூடாக குடிக்கக் கூடாது