கொங்கு தக்காளி ரசம் செய்வது எப்படி?
தேவையானவை:
பழுத்த நாட்டுத் தக்காளி - கால் கிலோ
கறிவேப்பிலை - சிறிதளவு
பூண்டு - 3 பல்
•மிளகு ஒரு டீஸ்பூன்
• காய்ந்த மிளகாய் -2
சீரகம் ஒரு டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
• சின்ன வெங்காயம் - 2 (நீளமாக நறுக்கவும்)
எண்ணெய் - 2 டீஸ்பூன்
கடுகு - அரை டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
• பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
• கொத்தமல்லித்தழை - சிறிதளவு
செய்முறை:
தக்காளியைக் கழுவி மண்சட்டியில் சேர்த்து நன்கு பிசையவும். பூண்டு, மிளகு, காய்ந்த மிளகாய், சீரகம், கறிவேப்பிலை சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். இதை அம்மியில் அரைத்தால் சுவையும் மணமும் கூடும். மண் சட்டியில் எண்ணெயைச் சேர்த்து சூடானதும் கடுகு போட்டு தாளித்து சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
பெருங்காயத்தூள் சேர்த்துக் கிளறி, அரைத்ததைச் சேர்த்துக் கிளறவும். இதில் பிசைந்த தக்காளி, மஞ்சள்தூள், உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதி வர ஆரம்பிக்கும் போது கொத்தமல்லித்தழை தூவி அடுப்பை அணைத்து மூடி விடவும். சுவையான கொங்கு தக்காளி ரசம் ரெடி.