வெஜ் சூப் செய்வது எப்படி?

vegetable-soup-recipe
வெஜ் சூப் செய்வது எப்படி?

தேவையானவை:

25 கிராம்கேரட்
ஒரு சிறிய துண்டுபீட்ரூட்
25 கிராம்பட்டர் பீன்ஸ்
25 கிராம்பச்சைப் பட்டாணி
ஒரு சிறிய உருளைக்கிழங்கு
25 கிராம்பீன்ஸ்
ஒன்றுதக்காளி
சிறிதளவுபுதினா இலை
சிறிதளவுமல்லி இலை
3 பல்பூண்டு
6மிளகு
அரை டீஸ்பூன்சீரகம்
ஐந்துசின்ன வெங்காயம்
தேவைக்கேற்பஉப்பு
அரை டீஸ்பூன்மஞ்சள்தூள்

செய்முறை
விருப்பமான காய்கறிகள் அனைத்தையும் சுத்தம் செய்து நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் மேலே குறிப்பிட்ட அனைத்து பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் போட்டு 4 டம்ளர் தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விடவும்

பின்னர் நான்கு டம்ளர் தண்ணீர் மூன்று டம்ளராக வற்றிப் போகும். வடிகட்டி வைத்து வடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
இந்த காய்கறி சூப் சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியம் அடையும். எலும்பு வலுபெறும்.

சூப்பை வடிகட்டிய பின்னர் வேகவைத்த காய்கறிகளை வீணாக்காமல் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்கறிகளை வதக்கி அதில் தேங்காய் பூவை தூவி 2 சொட்டு தேங்காய் எண்ணெய் ஊற்றி கலந்து விட்டு இறக்கி சாப்பிடலாம் மிகவும் சுவையாக இருக்கும்...