10 வகை பாயாசம் செய்வது எப்படி?

payasam-recipe-cooking-tips
10 வகை பாயாசம் செய்வது எப்படி?

1  பலாப்பழ பாயாசம்

தேவையான பொருட்கள்
அரை மணிநேரம்
4 பேர்கள்
ஜவ்வரிசி- 1 கப்
நல்ல பலாப்பழம்- 5 சுளைகள்
வெல்ல பாகு- அரை கப்
ஏலக்காய்தூள் -அரைஸ்பூன்
தேங்காய்- அரைமூடி
முந்திரிபருப்பு- 8
கிஸ்மிஸ்பழம் - 15
நெய் - 6 ஸ்பூன்

சமையல் குறிப்புகள்
முதலில் தேவையானவற்றை ரெடி பண்ணிக் கொள்ளவும்..பலா சுளைகளைக்கட்பண்ணிக்கொள்ளுங்கள்.
வெல்லப்பாகுகாய்ச்சிவடிகட்டிக்கொள்ளுங்கள்.

ஜவ்வரிசியை குக்கரில் தண்ணீர்விட்டுவேகவைத்துக்கொள்ளுங்கள். தேங்காய் பால் மூன்றுபால் எடுத்துவைத்துக் கொள்ளுங்கள்.மூன்றாம்பாலைவிடவும்.பலா பழத்தைச்சேர்க்கவும்.பின் இரண்டாம்பால் சேர்க்கவும்.

வெல்லப்பாகுசேர்த்து மூன்றாம்பால் சேர்க்கவும்.தேங்காய் சிறிதளவு கட் பண்ணிக்கொள்ளவும்,
வாணலியில் 2ஸ்பூன்நெய்விட்டு முந்திரி,திராட்சை, கட் பண்ணிய தேங்காய் சேர்த்து வறுத்து பாயாசத்தில் சேர்க்கவும்.மீதி நெய்யை பாயாசத்தில் சேர்க்கவும்.

சுவையான மணமான பலாப்பழப் பாயாசம் ரெடி.சுவைத்து மகிழுங்கள்.. நன்றி மகிழ்ச்சி.

2 கேரட் பாயாசம்

தேவையான பொருட்கள்
15 மினிட்
கேரட்_5
நெய்_தேவையான அளவு
முந்திரி_ தேவையான அளவு
உளர் திராட்சை_தேவையான அளவு
தேங்காய்_சிறிது அளவு
வெல்லம்_தேவையான அளவு
பால்_1கப்
ஏலக்காய் தூள் சிறிதளவு

சமையல் குறிப்புகள்
கேரடை தூவி நேய்யில் வதக்கி ஆரவைத்து அரைத்துக் கொள்ளவும்.
முந்திரி உளர் திராட்சை நறுக்கிய தேங்காய் ஓரு கை ஆகியவற்றை நெய்யில் வருத்து கொள்ளவும்.
அதனுடன் ஒரு டம்லர் தண்ணீர் வெல்லம் சேர்த்து கொதிக்க வைக்கவும். தேவைபட்டால் தண்ணீர் மீண்டும் ஒரு டம்ளர் சேர்கவும்.

நன்கு கொதித்தவுடன் கேரட் அரைத்த கலவையை சேர்க்கவும்.
அதனுடன் 1 கப் பால் சேர்கவும்.
சேர்த்து கொதித்தவுடன் ஏலக்காய் தூள் சேர்க்கவும்.
இப்போது 5 டிஸ்புன் நெய் சேர்த்து கிளரவும்.
இப்போது சுவையான கேரட் பாயாசம் ரெடி.


3 கோதுமை பாயாசம்

தேவையான பொருட்கள்
45 நிமிடங்கள்
6 பரிமாறுவது
1 டம்ளர் உடைத்த கோதுமை
3 டம்ளர் பால்
2 டம்ளர் தண்ணீர்
2 டம்ளர் வெல்லம்
2 டம்ளர் திக்கான தேங்காய் பால்
1 ஸ்பூன் ஏலத்தூள்
1/2 ஸ்பூன் சுக்குத் தூள்
1/4 ஸ்பூன் ஜாதிக்காய் பொடி
1 சிட்டிகை உப்பு
3 டேபிள் ஸ்பூன் நெய்
1/2 கப் தேங்காய் துண்டுகள்
25 முந்திரி

சமையல் குறிப்புகள்
குக்கரில் நெய் விட்டு சூடானதும் உடைத்த கோதுமையை சேர்த்து நன்கு வதக்கவும் பின் பால் மற்றும் தண்ணீர் கலந்து ஊற்றவும்
குக்கரை மூடி 3 விசில் வந்ததும் இறக்கவும்
ப்ரஷர் அடங்கியதும் குக்கரை திறந்து ஒரு முறை கலந்து கொள்ளவும்
பின் வெல்லம் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்

பின் நெய் விட்டு சூடானதும் முந்திரி தேங்காய் துண்டுகள் சேர்த்து பொன்னிறமாக வறுத்து கொட்டவும் பின் எடுத்து வைத்துள்ள தேங்காய் பால் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
பின் ஏலத்தூள் சுக்குத் தூள் ஜாதிக்காய் பொடி சேர்த்து நன்கு கலந்து ஒரு கொதி கொதிக்க விட்டு இறக்கவும்

சுவையான ஆரோக்கியமான மணமான கோதுமை பாயாசம் ரெடி.

4  அவள் பாயாசம்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
4 பேர்
1 கப்சிவப்பு அவல்
1/2 லிட்டர்பால்
1 கப்சர்க்கரை
5முந்திரி பருப்பு
2ஏலக்காய்
1 ஸ்பூன்நெய்

சமையல் குறிப்புகள்
அவலை நெய்யில் வறுத்து முந்திரி,ஏலக்காய் பால் விட்டு அரைத்து கொள்ளவும்
பாலை நன்கு காய்ச்சி அவல் சேர்த்து நன்கு வெந்ததும் சர்க்கரை,முந்திரி,ஏலக்காய் விழுது சேர்த்து 1 கொதி விட்டு இறக்கவும்

5 பஞ்சாபி பாஸ்தா பாயாசம்

தேவையான பொருட்கள்
30 நிமிடங்கள்
3 நபர்கள்
1 கப்பாஸ்தா -
3 கப்பால் -
1/2 கப்சர்க்கரை -
5 ஸ்பூன்நெய் -
1/4 கப்தேங்காய் துருவல் -
6முந்திரி -
3ஏலக்காய் -

சமையல் குறிப்புகள்
முதலில் பாஸ்தாவை வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின் தேங்காய் மற்றும் 4 முந்திரி சேர்த்து மிக்ஸியில் அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு பாத்திரத்தில் நெய் சேர்த்து நெய் உருகியதும் 2 முந்திரி சேர்த்து வறுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் ஒரு வானலியில் பாலை ஊற்றி பால் காய்ந்ததும் சர்க்கரை மற்றும் ஏலக்காய் சேர்க்க வேண்டும்.
சர்க்கரை கரைந்து 5 நிமிடங்கள் பால் சுண்டியதும் அரைத்து வைத்த தேங்காய் விழுதை சேர்த்து வேக வைத்த பாஸ்தாவை சேர்க்க வேண்டும்.

10 நிமிடங்கள் நன்றாக கொதித்ததும் இறக்கினால் சுவையான பாஸ்தா பாயாசம் ரெடி!..

6 பாசி பருப்பு பாயாசம்
தேவையான பொருட்கள்
30 நிமிடம்
4 பரிமாறுவது
1கப் பாசிப்பருப்பு
3/4கப் வெல்லம்
தேவையானஅளவு முந்திரி பருப்பு, திராட்சை
3டேபிள்ஸ்பூன் தேங்காய் துருவல்
1/2கப் காய்ச்சிய பால்
1 ஏலக்காய்
2டேபிள்ஸ்பூன் நெய்

சமையல் குறிப்புகள்
பாசிப்பருப்பை லேசாக வறுத்து எடுத்து பின்னர் குக்கரில் சேர்த்து தண்ணீர் ஊற்றி‌ 4 விசில் விட்டு வேக வைத்து எடுக்கவும்.
பிறகு அடுப்பில் பாத்திரத்தில் வெல்லம், ஏலக்காய் சேர்த்து கலந்து விட்டு கரைத்து வடிகட்டி எடுத்து கொள்ள வேண்டும்.

பிறகு வேக வைத்த பருப்பை இதில் சேர்த்து கலந்து விட்டு சிறிது நேரம் கலந்து விடவும்.பிறகு தாளிப்பு கரண்டியில் நெய் விட்டு முந்திரி பருப்பு திராட்சை சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.தேங்காய் துருவல் சேர்த்து வதக்கி எடுக்கவும்.

பிறகு பருப்புடன் சேர்த்து கலந்து விட்டு பால் சேர்த்து கலந்து விடவும்.
சிறிது நேரம் கழித்து சூடாக எடுத்து பரிமாறவும். சுவையான பாசிப்பருப்பு பாயாசம் தயார். நன்றி.