முறுக்கு செய்வது எப்படி?
ஓமப்பொடி முறுக்கு:
தேவையானவை:
டலை மாவு - 2 கப்
அரிசி மாவு - ஒரு கப்
ஓமம் - சிறிது
தனி மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்(விருப்பமானால்)
பெருங்காயம் - கொஞ்சம்
உப்பு - தேவைக்கு
கடலை எண்ணெய் - தேவைக்கு.
செய்முறை
முதலில் கடலை மாவு,அரிசி மாவு,மிளகாய்த்தூள்,உப்பு இவற்றை சல்லடையில் போட்டு ஒருமுறை சலித்தெடுக்கவும்.
இவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் பெருங்காயம்,ஓமம் இவற்றைப் போட்டு சிறிதுசிறிதாகத் தண்ணீர் விட்டு பூரி மாவு பதத்தில் கெட்டியாகப் பிசைந்துகொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி அடுப்பிலேற்றி சூடுபடுத்தவும்.
எண்ணெய் காய்ந்ததும் முறுக்கு அச்சில் ஓமப்பொடி வில்லையைப்போட்டு அதில் கொள்ளுமளவிற்கு மாவைப் போட்டு நேராகவே வாணலில் பிழிந்துவிடவும் அல்லது ஒரு துணியில் பிழிந்து அதை எண்ணெய்யில் எடுத்து போடவும்.
பிழிந்த சிறிது நேரத்திலே வெந்துவிடும்.உடனே மறுபக்கம் திருப்பிவிட்டு எடுத்துவுடவும்.கொஞ்சம் கவனம் தேவை.இல்லையென்றால் ரொம்பவே சிவந்துவிடும்.இப்போது சுவையான ஓமப்பொடி முறுக்கு தயார்.
மைதா முறுக்கு:
தேவையானவை:
மைதா மாவு - 1/4 கிலோ
எள் - 1 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு.
செய்முறை
முதலில் மைதாவை மெல்லிய துணியில் கட்டி, ஆவியில் நன்றாக வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்.
வேகவைத்து ஆறிய மைதாவை உதிர்த்துவிட்டு, உப்பு கலந்த நீர், சீரகம், எள் சேர்த்து கெட்டியாக, முறுக்கு அச்சில் பிழியும் பக்குவத்தில் பிசைந்துகொள்ளவும். காரம் தேவையென்றால் சிறிது காரப்பொடி சேர்த்துக்கொள்ளலாம்.
பிசைந்த மாவை, சிறு சிறு தட்டுகளில் பிழிந்து,அதனை எண்ணெயில் இட்டு வேகவிடவும்.
ஒருபுறம் வெந்ததும் திருப்பிவிட்டு மறுபுறமும் நன்றாக வெந்ததும் எடுக்கவும். இப்போது சுவையான மைதா முறுக்கு தயார்.
கேழ்வரகு முறுக்கு:
தேவையானவை:
கேழ்வரகு மாவு - 2 கப்
அரிசி மாவு - 1 கப்
பொட்டுக்கடலை மாவு - 1/2 கப்
வெண்ணை அல்லது நெய் - 3 டீஸ்பூன்
வெள்ளை எள் - 1 டேபிள்ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு - 2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
எண்ணை - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை
முதலில் 1/4 கப் பொட்டுக்கடலையை மிக்ஸியில் போட்டு நன்றாகப் பொடித்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவு, அரிசி மாவு, 1/2 கப் பொட்டுக்கடலை மாவு, மிளகாய் தூள், பெருங்காயத்தூள், எள், வெண்ணை அல்லது நெய், உப்பு ஆகியவற்றப் போட்டு நன்றாகக் கலந்துக் கொள்ளவும்.
பின்னர் அதில் சிறிது சிறிதாக தண்ணீரை விட்டு மிருதுவாக முறுக்கு மாவு பதத்திற்கு பிசைந்தெடுத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணை விட்டு சூடாக்கவும். முறுக்கு அச்சில் மூன்று கண் நட்சத்திர வடிவிலான வில்லையைப் போட்டு, மாவை அதில் போட்டு எண்ணையில் சிறு சிறு வட்டங்களாக பிழிந்து விடவும்.
முறுக்கை திருப்பி விட்டு நன்றாக வெந்ததும் எடுத்து வைக்கவும். இப்போது சுவையான கேழ்வரகு முறுக்கு தயார்.
பச்சரிசி முறுக்கு
தேவையானவை:
பச்சரிசி - ஒரு கப்
தேங்காய்பால் - 1/2 கப் (அரிசி அரைக்கும் அளவுக்கு இருந்தால் போதுமானது)
மைதா - ஒரு டேபிள்ஸ்பூன்
முட்டை - 1
சர்க்கரை - தேவைக்கு
எள் - சிறிது
உப்பு - சிறுது
எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு