சேலம் மீன் குழம்பு செய்வது எப்படி?
தேவையானவை
(குழம்பு) மீன் - 1/2 கிலோ,
சின்ன வெங்காயம் - 10,
பூண்டு - 8 பல்,
தக்காளி - 1,
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி,
புளி - ஒரு பெரிய எழுமிச்சம் பழ அளவு,
வெந்தயம் - 1 தேக்கரண்டி,
உப்பு - தேவையான அளவு,
நல்லெண்ணெய் - 1 குழம்பு கரண்டி,
வதக்கி அரைப்பதற்கு
சீரகம் - 1 தேக்கரண்டி,
மிளகு - 1 தேக்கரண்டி,
சின்ன வெங்காயம் - 15,
பூண்டு - 10 பல்,
தக்காளி - 2,
தேங்காய் துருவல் - 1/4 மூடி,
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி,
தனியா தூள் - 1 மேசைக்கரண்டி,
தாளிக்க
கறிவேப்பிலை - சிறிது,
கடுகு - 1/2 தேக்கரண்டி,
சீரகம் - 1/4 தேக்கரண்டி,
வெந்தயம் - 1/4 தேக்கரண்டி,
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி.
செய்முறை
மீனை சுத்தம் செய்து, உப்பு, மஞ்சள் தூள் தேய்த்து, கழுவி வைக்கவும்
வெங்காயம், பூண்டை இரண்டாக நறுக்கி வைக்கவும்
தக்காளியை பெரிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும்
புளியை 1 டம்ளர் தண்ணீரில் ஊற வைத்து, கரைத்து வடிகட்டவும்
வாணலியில் 1/2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, மிளகு, சீரகம், வெங்காயம், பூண்டு, தக்காளி, தேங்காய் வதக்கி, அத்துடன் தனியா தூள், மிளகாய் தூள் சேர்த்து நைசாக அரைக்கவும்
அரைத்த விழுதை புளிகரைசலுடன் சேர்த்து கரைத்து வைக்கவும்
வாணலியில் மீதி எண்ணெயை ஊற்றி, கடுகு, சீரகம், வெந்தயம், கறிவேப்பிலை தாளித்து இரண்டாக நறுக்கிய பூண்டு, வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்
நன்கு வதங்கியதும் கரைத்து வைத்த புளிக்கரைசலை ஊற்றி, மஞ்சள் தூள், உப்பு போட்டு கொதிக்க விடவும்
குழம்பு கெட்டியானதும் சுத்தம் செய்த மீனை சேர்க்கவும்
மீன் வெந்ததும், வெந்தயத்தை வெறும் வாணலியில் வறுத்து, நைசாக பொடித்து, குழம்பில் போட்டு இறக்கவும்
நல்லெண்ணையை குழம்புக் கரண்டியில் ஊற்றி, அடுப்பில் சூடு பண்ணவும்
நன்கு சூடேறியதும் கரண்டியோடு சேர்த்து குழம்புக்குள் விட்டு கலக்கி மூடவும் மணமணக்கும் கலர்ஃபுல்லான மீன் குழம்பு தயார்
நல்லெண்ணய் சுட வைக்க தாளிக்கும் கரண்டி இரும்பில் வைத்திருப்பார்கள், அதிலும் சூடு பண்ணி ஊற்றலாம்
குழம்புக்குள் விடும் போது கவனமாக தள்ளி நின்று செய்யவும், இல்லையெனில் மேலெங்கும் தெறித்து விடும்.