ஆட்டுக்கால் பருப்பு பாயா செய்வது எப்படி?

mutton-leg-paya-cooking-tips
ஆட்டுக்கால் பருப்பு பாயா செய்வது எப்படி?

தேவையானவை:
 
ஆட்டுக்கால் 4
வெங்காயம் 2
தக்காளி 2
கடலைப்பருப்பு அரை கப்
இஞ்சி பூண்டு விழுது 3 டீஸ்பூன்
பச்சை மிளகாய் விழுது 2 டேபிள் ஸ்பூன்
பட்டை, ஏலக்காய், கிராம்பு தலா 2
மஞ்சள் தூள் அரை டீஸ்பூன்
மிளகாய் தூள் ஒரு டேபிள் ஸ்பூன்
மிளகுத் தூள் ஒரு டேபிள் ஸ்பூன்
சோம்புத் தூள் அரை டீஸ்பூன்
கரம் மசாலா 2 டேபிள் ஸ்பூன்
தனியாத் தூள் 2 டேபிள் ஸ்பூன்
தேங்காய் பால் ஒன்றரை கப்
தயிர் அரை கப்
முந்திரி பருப்பு 8
எண்ணெய் தேவைக்கேற்ப
கொத்தமல்லித் தழை ஒரு கைப்பிடி
புதினா ஒரு கைப்பிடி
உப்பு தேவைக்கேற்ப

செய்முறை :
 ஆட்டுக்காலை சுத்தம் செய்து வெட்டி வைக்கவும். வெங்காயம், தக்காளி, கொத்தமல்லித் தழையை நறுக்கிக் கொள்ளவும். அரை கப் தேங்காய் பால் விட்டு முந்திரிப் பருப்பை நன்றாக அரைத்துக் கொள்ளவும். கடலைப்பருப்பை ஊற வைக்கவும்.

 குக்கரில் எண்ணெய் ஊற்றி, சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் தாளித்து, வாசனை வந்ததும் வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாக மொறு மொறுவென வதக்கவும்.
 வதக்கியபின் இஞ்சி, பூண்டு விழுது, பச்சை மிளகாய் விழுது, சோம்புத் தூள், மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்.  பின் தக்காளி சேர்த்து வதக்கவும்.

 தயிர், கரம் மசாலா, தனியாத் தூள், உப்பு சேர்த்து ஆட்டுக்காலையும் சேர்க்கவும்.
 அதில் தேவையான அளவு நீர் ஊற்றி 5 விசில் வரும் வரை நன்கு வேக விடவும்.
 ஊற வைத்துள்ள கடலைப்பருப்பு, அரைத்த முந்திரிப்பருப்பு, தேங்காய் பால் ஊற்றி கொத்தமல்லித் தழை, புதினா தூவி 2 விசில் வரை வேக விடவும்.

 ப்ரஷர் அடங்கியவுடன் குக்கரைத் திறந்தால் ஆட்டுக்கால் நன்கு வெந்து, எண்ணெய் மேலே மிதந்து பாயா நல்ல பதத்துடன் வரும் நிலையில் இருக்கும். மேலும் சிறிது கொத்தமல்லித் தழை தூவி விடவும்.

 சுவையான சத்தான ஆட்டுக்கால் பருப்பு பாயா ரெடி.