வீட்டிலேயே பன்னீர் செய்வது எப்படி?

panneer-food-cooking-tips
வீட்டிலேயே பன்னீர் செய்வது எப்படி?

தேவையானவை:

பால் - 1 லிட்டர்  
எலுமிச்சம் பழம் - 1

செய்முறை -
எலுமிச்சம் பழத்தை பிழிந்து சாறு எடுத்து வைத்துக் கொள்ளவும்.

ஒரு வாயகன்ற பாத்திரத்தில் பாலை ஊற்றி அடுப்பில் வைக்கவும். பால் கொதித்தது பொங்கி வரும் போது எலுமிச்சை சாறை ஊற்றி ஒரு கரண்டியால் நன்கு கலக்கி விடவும்.
பால் திரிந்து இதே போல் வரும். பால் திரிந்தும் அடுப்பை அணைத்து விடவும்.

திரிந்த பாலை ஒரு மெல்லிய காட்டன் துணியில் வடி கட்டவும். பிறகு துணியை சுருட்டி தண்ணீரை நன்கு பிழியவும்.

துணி மூட்டையை ஒரு பலகை அல்லது தட்டு மேல் வைத்து அதன் மேல் ஒரு கனமான தட்டையான பொருளை அதன் மேல் வைக்கவும். கனமான பொருள் இல்லையென்றால் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து அதன் மேல் வைக்கவும்.

இரண்டு மணி நேரம் கழித்து பார்க்கும் போது நன்கு கெட்டியாகி விடும். பின்பு துண்டுகள் போடவும்.

பனீர் துண்டுகளை ஒரு காற்றுப் புகாத பாட்டிலில் போட்டு பிரிஜ்ஜில் வைத்துக் கொள்ளவும். தேவையான போது எடுத்து உபயோகித்துக் கொள்ளலாம். ஒரு லிட்டர் பாலுக்கு 20 பனீர்  துண்டுகள் வரும்.