சின்ன வெங்காயம் சாம்பார் செய்வது எப்படி?

chinna-vengayam-sambar-cooking-tips
சின்ன வெங்காயம் சாம்பார் செய்வது எப்படி?

தேவையானவை:

பருப்பு வேக வைப்பதற்கு...
* துவரம் பருப்பு - 1 கப் அல்லது 200 கிராம் * தண்ணீர் - 2 கப் * மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் * பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை * விளக்கெண்ணெய் - 1/2 டீஸ்பூன்
* எண்ணெய் - 3 டீஸ்பூன்
 * கடுகு - 1 டீஸ்பூன் * வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
 * சீரகம் - 1/2 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
 * சின்ன வெங்காயம் - 200 கிராம்
 * பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
 * கறிவேப்பிலை - 1 கொத்து
 * வரமிளகாய் - 1
 * தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* சாம்பார் தூள் - 1 1/2 டீஸ்பூன்
 * புளி - சிறிய எலுமிச்சை அளவு (நீரில் ஊற வைத்து சாறு எடுத்துக் கொள்ளவும்) கொத்தமல்லி - சிறிது

செய்முறை:
* முதலில் குக்கரில் துவரம் பருப்பை 2 முறை நீரில் நன்கு கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் 2 கப் நீர், மஞ்சள் தூள், பெருங்காயத் தூள், விளக்கெண்ணெய் ஊற்றி அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.

* விசில் போனதும் குக்கரைத் திறந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, வெந்தயம், சீரகம், பெருங்காயத் தூள் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் சின்ன வெங்காயத்தை சேர்த்து 2 நிமிடம் வதக்கி, பின் பச்சை மிளகாய், கறிவேப்பிலை, வரமிளகாய் சேர்த்து சிறிது நேரம் வதக்க வேண்டும்.

* பிறகு அதில் தக்காளியை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி நன்கு 2 நிமிடம் வதக்க வேண்டும்.
* பின் அதில் சாம்பார் தூளை சேர்த்து 1 நிமிடம் குறைவான தீயில் வைத்து கிளறி, வேக வைத்துள்ள பருப்பை சேர்த்து கலந்து, மிகவும் கெட்டியாக இருந்தால், சிறிது நீரை ஊற்றி கலந்து, மூடி வைத்து 5 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* 5 நிமிடம் கழித்து, மூடியைத் திறந்து, பின் புளிச்சாற்றினை ஊற்றி, உப்பு சுவை பார்த்து, வேண்டுமானால் உப்பு சேர்த்து கிளறி, மீண்டும் மூடி வைத்து 5 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* இறுதியாக அதில் கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான சின்ன வெங்காய சாம்பார் தயார்